• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • IPL MI vs RR| மும்பை இந்தியன்சுக்கு ‘நாக்-அவுட்’ பஞ்ச் கொடுக்குமா ராஜஸ்தான்?

IPL MI vs RR| மும்பை இந்தியன்சுக்கு ‘நாக்-அவுட்’ பஞ்ச் கொடுக்குமா ராஜஸ்தான்?

மும்பைக்கு சிக்கல், ராஜஸ்தான் அதிரடி பார்மில் உள்ளது.

மும்பைக்கு சிக்கல், ராஜஸ்தான் அதிரடி பார்மில் உள்ளது.

இன்று ஷார்ஜாவில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஐபிஎல் 2021 தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. 2 போட்டிகளிலும் வென்றாலும் பிளே ஆப் தகுதி நேரடியாகக் கிடைக்காது என்ற நிலையில் இன்று சஞ்சு சாம்சன் படை நாக்-அவுட் பஞ்ச் கொடுத்தால் ரோகித் சர்மா படை வெளியேற வேண்டியதுதான்.

 • Share this:
  மும்பை அணியின் நிகர ரன் விகிதம் மோசமாக உள்ளதால், 2இல் வென்றாலும் நேரடியாகத் தகுதி பெற முடியாது. மாறாக ராஜஸ்தான் ராயல்ஸ் அன்று சென்னை சூப்பர் கிங்ஸின் 190 ரன்கள் இலக்கை ஒன்றுமேயில்லாமல் ஊதியது, ருதுராஜின் அபாரமான சதம் வீணானது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே புரட்டி எடுத்து விட்டனர், இது போன்ற அச்சமற்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்தே கொல்கத்தாவும் பிளே ஆஃப் தகுதியில் உள்ளது.

  ராஜஸ்தான் ராயல்ஸ் தனக்கு இருக்கும் இன்றைய போட்டியையும் வென்று இன்னொரு போட்டியிலும் வென்றால் 14 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும் கொல்கத்தா வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். மும்பை இந்தியன்ஸ் நல்ல ரன் ரேட்டில் பெரிய இடைவெளியில் வெல்ல முதலில் ஹிட்மேன் ரோகித் சர்மா பெரிய அளவுக்கு ஆட வேண்டும், இன்னும் அவரிடமிருந்து ஒரு அவர் பாணி இன்னிங்ஸ் வரவில்லை.

  குவிண்டன் டி காக் ஒரு அரைசதத்தை விட்டால் நல்ல தொடக்கத்தை வீணடிக்கிறார். சூரியகுமார் யாதவ் இந்திய உலகக்கோப்பை அணியில் தேர்வாகி விட்டதனால் மோட்டிவேஷன் இல்லாமல் இருக்கிறார். இஷான் கிஷன் லெவனில் இடம்பெறுவதே கடினம். சவுரவ் திவாரி போன்ற வீரரை நம்பி மும்பை இண்டியன்ஸ் அவல நிலையில் உள்ளது.

  கெய்ரன் பொலார்டு தன் அதிரடி பலத்தைக் காட்ட முடியாமல் கைகள் கட்டப்பட்டுள்ளன, ஏனெனில் பெரும்பாலும் மும்பை சரிவின் போது இறங்குகிறார், அதனால் ஃபயர் பவரைக் காட்ட தயங்குகிறார். ஹர்திக் பாண்டியாவுக்கு திடீர் திடீரென பேட்டிங் மறந்து விடுகிறது. அவர் பவுலிங் போடாதது மும்பைக்கு கை ஒடிந்தாற்போல் உள்ளது, இவரை முன்னால் களமிறக்கி சுழற்றச் சொல்லலாம்.

  எவின் லூயிஸ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அடிதடி ஓப்பனர்களாக இருப்பதால் பும்ராவை தொடக்கத்தில் கொடுக்க வேண்டும் இன்று க்ருணால் பாண்டியாவிடம் கொடுத்தால் மேட்சையே மும்பை கொடுப்பதற்குச் சமமாகி விடும் இருவரும் குருணாலைப் பின்னி பிரிகட்டி விடுவார்கள்.

  ராயல்ஸ் இன்று மும்பையை வீழ்த்தினால் 12 புள்ளிகளுடன் கொல்கத்தாவுக்கு சமமாக இருக்கும். இப்படி நடந்தால் ராயல்ஸ்-கொல்கத்தா மேட்ச் காலிறுதி போல்தான். வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் செல்லும். மும்பை அணி ராயல்ஸ், சன் ரைசர்ஸ் இரண்டையும் விழ்த்தினால் தகுதி பெற வாய்ப்புண்டு. ஆனால் ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை கட்டாயமாக வீழ்த்தினால்தான் மும்பை தகுதி வாய்ப்பு பெறும். மாறாக கொல்கத்தா அணி ராஜஸ்தானை வீழ்த்தி விட்டால் மும்பை கதி அதோகதியாகிவிடும்.

  மும்பை இந்தியன்ஸ் லெவன்: ரோகித் சர்மா, டி காக், சூரியகுமார், சவுரவ் திவாரி, கிரன் பொலார்டு, ஹர்தில் பாண்டியா, குருணால் பாண்டியா, நேதன் கூல்ட்டர் நைல், ஜெயந்த் யாதவ், ராகுல் சாகர், பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

  ராஜஸ்தான் ராயல்ஸ்: எவின் லூயிஸ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, கிளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், திவேத்தியா, ஆகாஷ் சிங், மயங்க் மார்க்கண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், சேத்தன் சக்காரியா.

  ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: