IPL 2021 MI vs DC:ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்- வெந்த புண்ணில் வேல்

IPL 2021 MI vs DC:ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்- வெந்த புண்ணில் வேல்

ரோஹித் சர்மா

டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக மும்பை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அவரது சம்பளத்தொகையில் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக மும்பை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அவரது சம்பளத்தொகையில் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று ஓவர்களை மிகவும் தாமதமாக வீசி குறித்த நேரத்தில் வீசாமல் போனதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    இந்த சீசனில் இதுவே முதல் ஓவர் ரேட் அபராதமாகும். அடுத்தடுத்து ஓவர் ரேட் விவகாரத்தில்  சிக்கினால் இவரது அணிக்கு பெரிய பெரிய அபராதம் விதிக்கப்படும்.

    மும்பை இந்தியன்ஸ் நேற்று 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வி தழுவி தனது 2வது தோல்வியை அடைந்தது. அடுத்ததாக பஞ்சாப் கிங்ஸ் அணியை மும்பை அணி வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கிறது.

    டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி மந்தமான கிரிக்கெட்டுக்கு லாயக்கற்ற சென்னை பிட்சில் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. பவர் ப்ளே வரை மும்பை இந்தியன்ஸ் வலுவாக இருந்தது. ஆனால் அதன் பிறகு இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா புகுந்தார். 67/1 என்று இருந்த மும்பை அணி கெய்ரன் பொலார்ட் எல்.பி. ஆன பிறகு 84/6 என்று தோல்வியை எதிர்கொண்டது.

    காரணம் அமித் மிஸ்ரா 4 ஓவர் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள். ரோகித் சர்மா (44), இஷான் கிஷன் (26), ஹர்திக் பாண்டியா (0), பொலார்ட் (2) ஆகியோரை அமித் மிஸ்ரா சடுதியில் பெவிலியனுக்கு அனுப்பி மும்பை அதிரடி மிடில் ஆர்டர் முதுகெலும்பை உடைத்தார். இதனால் 137 ரன்களில் முடிந்தது மும்பை, இலக்கை விரட்டிய டெல்லி  அணி ஏதோ பழைய வெஸ்ட் இண்டீஸின் ராபர்ட்ஸ், மார்ஷல், கார்னர் வீசுவது போல் சொதப்பு சொதப்பு என்று சொதப்பி பவுண்டரிகளே அடிக்காமல் ஒன்று இரண்டு என்று மகா அறுவையாக ஆடி ஒருவழியாக கடைசி ஓவரில் 138/4 என்று வெற்றி பெற்றனர்.
    டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் சவுகரியமாக வென்றதாகக் கூற முடியாது, 20வது ஓவரின் முதல் பந்தில்தான் வெற்றி பெற்றது, ஆனால் சரிவு கண்டு விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தது அதன் எச்சரிக்கையான அணுகுமுறையில் தெரிந்தது. ஷிகர் தவான் செம பார்மில் இருக்கிறார், அவரது டைமிங், ஷாட் தேர்வில் முதிர்ச்சி தெரிகிறது.

    அவர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் விளாசி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்கள் எடுத்தார். பிரிதிவி ஷா சொதப்பலாக ஆட்டமிழந்த பிறகு ஸ்மித், தவான் இணைந்து 53 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தனர். மும்பை தரப்பில் ஜெயந்த் யாதவ் சிறப்பாக வீசினார். பும்ரா 4 ஓவர் 32 ரன்களை விட்டுக் கொடுத்து சொதப்பினார்.
    Published by:Muthukumar
    First published: