• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஸ்கூல் பையன் மாதிரி பேட் செய்கிறார் சுரேஷ் ரெய்னா- டேல் ஸ்டெய்ன் கிண்டல்

ஸ்கூல் பையன் மாதிரி பேட் செய்கிறார் சுரேஷ் ரெய்னா- டேல் ஸ்டெய்ன் கிண்டல்

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

ஐபிஎல் தொடர் நேற்று மீதமுள்ள போட்டிகளுக்காக யுஏஇயில் நேற்று தொடங்கியது, இதில் சுரேஷ் ரெய்னா மிக மோசமாக ஆடியதாகவும் ட்ரெண்ட் போல்ட் வீசுவது சுத்தமாக ரெய்னாவுக்குப் புரியவில்லை என்றும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்புயல் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ரெய்னா நேற்று 6 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் ராகுல் சாகரிடம் கேட்ச் ஆனார். அதாவது ஷார்ட் பிட்ச் பந்துன்னா ரெய்னாவுக்கு பயம் என்பது போல் ஒதுங்குகிறார், போல்ட் வீசிய இந்தப் பந்துக்கு ஒதுங்கினார். பிறகு மட்டையை வீசினார் பந்தில் பட்டு மட்டை இரண்டாக உடைந்தது. பந்து பாயிண்ட் பகுதியில் கேட்ச் ஆனது. இந்த இன்னிங்ஸை அவர் திரும்பிப் பார்க்க ஆசைப்படமாட்டார், மிக மோசமாக இருந்தது அவரது ஆட்டம். சிஎஸ்கே 7/3, பிறகு தோனியும் ஷார்ட் பிட்ச் பந்தில் புல்ஷாட்டில் போல்ட்டின் அபார கேட்சுக்கு வெளியேற சிஎஸ்கே 25/4 என்று முடிந்தது, இதனையடுது ருதுராஜ் அற்புத அதிரடி இன்னிங்சில் 88 எடுத்து பிராவோ 7 பந்துகளில் 23 எடுத்து ஸ்கோரை 156 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், இது வெற்றி இலக்காக மாறியது வேறு கதை.

    ரெய்னா பேட்டிங் குறித்து கெவின் பீட்டர்சன் வர்ணனையில் டேல் ஸ்டெய்னிடம், “ரெய்னாவை விட நீங்கள் நன்றாக ஆடுவீர்கள் போலும்” என்று விமர்சனம் வைத்தார். ரெய்னா சின்ன தல என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர், தோனிக்கு அடுத்த இடம் ரசிகர்களிடத்தில் ரெய்னாவுக்குத்தான் உள்ளது, எனவே அவர் விட்ட இடத்திலிருந்து தொடர்வார் என்று பார்த்தால் தொடர்ந்த இடத்தையே விட்டு விட்டார்”

    இந்நிலையில் டேல் ஸ்டெய்ன் கூறும்போது, “அவர் ஒன்றையும் விரும்பவில்லை. அந்தத் தருணத்தில் ரெய்னா ஸ்கூல் பாய் கிரிக்கெட் வீரர் போல் இருந்தார். ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் இப்படி ஆடுவாரா என்று நான் உண்மையில் நம்பவில்லை. தர்மசங்கடமாக மட்டையும் உடைந்து போய் பரிதாபமாக அவர் வெளியேறினார். பந்து சிக்சருக்குப் போயிருந்தால் நான் இதைக் கூறப்போவதில்லை. ஆனால் நடந்தது என்ன மட்டை உடைந்து போய் கேட்ச் ஆகி பாவம்” என்றார் டேல் ஸ்டெய்ன்.



    ரெய்னா ஐபிஎல் கிரிகெட்டில் 3வது இடத்தில் இருக்கிறார், அதிக ரன்களை எடுத்துள்ளார், ஆனால் டேல் ஸ்டெய்ன் சொல்வது போல் நேற்று ஸ்கூல் பாய் போல் ஷார்ட் பிட்ச் பந்துக்கு பயப்பட்டார். சரியாக ஆடவில்லை, பார்க்க கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருந்தது, ஆனால் இது ரெய்னா இல்லை, நிச்சயம் ஒரு படையல் உண்டு.

    Also Read: சவுரவ் திவாரி திறமைக்கும் குறைவில்லை, ‘பருமனுக்கும்’க்கும் குறைவில்லை- சபா கரீம்


    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: