• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 3 விக்கெட்டுகளை இழந்தது பாவச்செயல்: தோல்வி கேப்டன் பொலார்டு வேதனை

3 விக்கெட்டுகளை இழந்தது பாவச்செயல்: தோல்வி கேப்டன் பொலார்டு வேதனை

பொலார்டு

பொலார்டு

ஐபிஎல் 2021 டி20 தொடரின் 30வது போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. இதில் மூன்று விக்கெட்டுகளை சடுதியில் இழந்ததை பாவ காரியம் என்கிறார் கேப்டன் கிரன் பொலார்டு.

  • Share this:
    157 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் களமிறங்கி 2.2 ஓவர்களில் 18 ரன்கள் என்ற ஓரளவுக்கு நல்ல தொடக்கமே கண்டது. ஆனால் ராகுல் சாகர் அருமையாக வீசி குவிண்டன் டி காக் (17) விக்கெட்டை எல்.பி.டபிள்யூ முறையில் வீழ்த்தினார். அன்மோல்பிரீத் சிங் மிக அருமையாக ஹேசில்வுட்டை ஒரு பவுண்டரி அதை விட அருமையாக ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ் என்று ஆடி வந்த நிலையில் சாகரின் நேர் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். சூரியகுமார் யாதவ் நிதானம் காட்டாமல் பிட்ச் எப்படி நடந்து கொள்கிறது என்பதைக் கணிக்காமல் மிட் ஆப் மேல் தூக்க நினைக்க பந்து சற்றே நின்று வர கொடியேற்றினார், ஆனால் டுபிளெசிஸ் தன் தென் ஆப்பிரிக்க பீல்டிங்கை வெளிப்படுத்தி அட்டகாசமான கேட்சை எடுத்தார்.

    இஷான் கிஷனை தோனி அருமையாக ஷாட் கவர் பீல்டரை நிற்க வைத்து ஸ்லோ பந்தை பிராவோ வீச வாரிக்கொண்டு அதை ட்ரைவ் ஆடி ரெய்னாவிடம் கேட்ச் ஆகி வெளியேற மும்பை இந்தியன்ஸ் 58/4 என்று சரிவு கண்டது. பொலார்டு இறங்கி 1 சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று கலக்க, ஹேசில்வுட் கொண்டு வரப்பட அவர் பந்தை உள்ளே கொண்டு வர பொலார்ட் மட்டை பந்துக்கு மெதுவாக இறங்குவதற்குள் பந்து பின் காலைத் தாக்க எல்.பி.ஆனார். ஆனால் ரிவியூவும் பயனளிக்கவில்லை மும்பை 87/5 என்று ஆன கையோடு எழும்ப முடியவில்லை. பிராவோ 3 விக்கெட்டுகளைச் சாய்க்க சவுரவ் திவாரி அரைசதம் வெற்றிக்கான இன்னிங்ஸாக இல்லை. எனவே 136 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்களில் முடிந்தது.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொலார்டு கூறும்போது, “ருதுராஜ் உண்மையாக நன்றாகவே பேட்டிங் செய்தார். டி20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மென் கடைசி வரை ஆடினால் உண்மையில் அது ஒரு அணியை பாதிக்கவே செய்யும். பந்து வீச்சில் கடைசி ஓவர்களை சரியாக வீசவில்லை. 20 ரன்களில் தோற்பது என்றால் கூடுதல் ரன்களைக் கொடுத்திருக்கிறோம் என்றே அர்த்தம்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    பிட்ச் நன்றாக இருந்தது, புதிய பந்து ஸ்விங் ஆனது. எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்க விக்கெட்டுகளை எடுத்தனர். அவர்கள் 150+ ரன்களை எடுத்தாலும் நாங்கள் இலக்கை எட்டியிருக்கலாம். 3 விக்கெட்டுகளை இழந்தது பாவச்செயல். சூழ்நிலையைக் கணக்கில் எடுத்து கொண்டால் சவுரவ் திவாரி நன்றாக பேட் செய்தார்” இவ்வாறு கூறினார் பொலார்டு.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: