IPL 2021 : ஐபிஎல் 2021 தொடர் நடக்குமா? ரத்தாகுமா?

IPL 2021 : ஐபிஎல் 2021 தொடர் நடக்குமா? ரத்தாகுமா?

தோனி

ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் வரிசையாக கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால் எஞ்சியுள்ள போட்டிகள் நடக்குமா அல்லது ரத்தாகுமா என கேள்வி எழுந்துள்ளது.

  • Share this:
இந்தியாவில் கொண்டாடப்படும் உட்சபட்ச கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டி நடப்பாண்டு 14 வது முறையாக களைகட்டி வருகிறது. கடந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் போட்டி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.  இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்தியாவில் நடைபெறுகின்றன

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அக்‌ஷர் படேல், நார்ட்ஜே உள்ளிட்ட வீரர்களுக்கு ஆரம்பத்தில் கொரோனோ உறுதி செய்யப்பட்டாலும்  தனிமைப்படுத்தப்பட்டு கொரோனோ நெகட்டிவ் வந்தபிறகு அணியில் சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே வீரர்கள் மத்தியில் மீண்டும் கொரோனோ பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அணியில் இடம்பெற்று சில போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா சுழற்பந்துவீச்சாளரும் தமிழக வீரருமான வருண் சக்கரவர்த்தி, சந்தீப் ஆகியோருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நேற்று நடைபெறவிருந்த கொல்கத்தா பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டி ஒத்திவைக்கப்பட்டது,

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி உள்ளிட்ட மூவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சி.எஸ்.கே அணியும் இனிவரக்கூடிய போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாளை மறுநாள் சென்னை அணி ராஜஸ்தான் அணியுடம் மோதுவதாக இருந்தது இந்த போட்டியும் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனோ பரவல் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் சில வெளிநாட்டு வீரர்களும் போட்டியை புறக்கணித்து விட்டு சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.  இரண்டாம் கட்ட போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருவதால் கொரோனா குறித்த அச்சம், வீரர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது. பிசிசிஐ யின் பாதுகாப்பு வளையத்தை கொரோனோ தகர்த்துவிட்டதா என்ற அச்சமும் வீரர்கள் மத்தியில் நிலவுகிறது.

போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டது ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. இனிவரக்கூடிய போட்டிகள் தடையின்றி நடக்குமா பிசிசிஐ எந்தமாதிரியான முடிவை எடுக்க போகிறது என்பதைபொருந்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Published by:Vijay R
First published: