IPL 2021: கொரோனா அச்சுறுத்தலிலும் விடாது ஐபிஎல் 2021: மே 7ம் தேதியிலிருந்து போட்டிகள் மும்பைக்கு மாற்றம்?

IPL 2021: கொரோனா அச்சுறுத்தலிலும் விடாது ஐபிஎல் 2021: மே 7ம் தேதியிலிருந்து போட்டிகள் மும்பைக்கு மாற்றம்?

ஐபிஎல் கோப்பை

மே மாதம் 7 முதல் ஐபிஎல் 2021 போட்டிகள் கொரோனா பரவலில் முதலிடமாகத் திகழும் மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பைக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து போட்டிகளை மாற்றுவதற்கு பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இதனையடுத்து பெங்களூரு, மற்றும் கொல்கத்தவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு போட்டிகளை மும்பைக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    அணிகள் தற்போது டெல்லியிலும் அகமதாபாத்திலும் உள்ளன, இங்கு மே 8ம் தேதி வரை போட்டிகள் ஆடப்பட வேண்டியுள்ளது.

    கேகேஆர் வீரர்களான வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா பாசிட்டிவ், இதனையடுத்து நேற்று நடைபெற வேண்டிய கொல்கத்தா-ஆர்சிபி மேட்ச் ஒத்தி வைக்கப்பட்டது.

    டெல்லி மைதானத்தின் ஐந்து ஊழியர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ரோஹன் ஜெட்லி பிற்பாடு விளக்கும் போது இவர்கள் 5 பேரும் பணியில் இல்லை விடுப்பில் உள்ளனர் என்றார்.

    ஐபிஎல் 2021-ன் முதல் சுற்று ஆட்டங்கள் சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றன. அடுத்தடுத்து போட்டிகளை டெல்லி-அகமதாபாத், பெங்களூரு-கொல்கத்தா என்று நடத்த திட்டமிட்டிருந்தனர். இதனையடுத்து பிளே ஆஃப், மற்றும் இறுதிப்போட்டிகள் அகமதாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.

    இப்போது ஐபிஎல் அரங்கத்துக்குள்ளேயே கொரோனா நுழைந்ததால் ஒரே மைதானத்தில் மீதிப் போட்டிகளை நடத்தி முடிக்க மும்பையை தேர்வு செய்திருப்பதாகத் தெரிகிறது.

    கொல்கத்தா வீரர்களில் கொரோனா பாதித்த சந்தீப் வாரியருக்கு காய்ச்சலோ, பிற கொரோனா நோய் அறிகுறிகளோ இல்லை அவர் நன்றாக இருக்கிறார். வருண் கொஞ்சம் நோய் அறிகுறிகளுடன் இருக்கிறார், அவரும் கூட நேற்று நல்லபடியாக உணர்ந்ததாக கொல்கத்தா சி.இ.ஓ. வெங்கி மைசூர் தெரிவித்தார்.
    Published by:Muthukumar
    First published: