“வயதானவனாக என்னை உணரவைக்கிறது!” - என்ன சொல்கிறார் தோனி?

தோனி

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நேற்று தனது 200வது போட்டியில் தலைமையேற்று விளையாடி புதிய மைல்கல்லை தோனி கடந்துள்ளார்.

 • Share this:
  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டு ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தான் வயதானவனாக உணர்வதாக கூறியுள்ளது அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

  இந்திய அணிக்காக பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் என்னற்ற பல சாதனைகளை படைத்து விட்டு கூலாக ஓய்வு முடிவை அறிவித்தவர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணிக்காக அவர் விளையாடுவதை காண முடியாதவர்களுக்கு ஐபிஎல் போட்டிகள் ஆறுதல் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. தோனி தற்போது 40வது வயதை நெருங்கிக் கொண்டுள்ளார். இருப்பினும் கிரிக்கெட் களத்திற்கு வந்துவிட்டால் வயது வெறும் ஒரு நம்பர் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில் அதிரடியாய் இருக்கும் அவரது ஆட்டம்.

  இவ்வாறான சூழலில் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நேற்று தனது 200வது போட்டியில் தலைமையேற்று விளையாடி புதிய மைல்கல்லை தோனி கடந்துள்ளார். நேற்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இச்சாதனையை படைத்துள்ளார்.

  இதனிடையே வெற்றி பெற்ற பின்னர் பேசிய மகேந்திர தோனி மனம் திறந்து சில கருத்துக்களை கூறினார். 200 போட்டிகளில் விளையாடியதால் அவருக்கு இப்படி தோன்றியதா என தெரியவில்லை ஆனால் தனக்கு வயதானவனாக என்னை உணரவைப்பதாக நேற்று திடீரென தோனி கூறினார்.

  பவர்ப்ளேயில் எகிறிய மும்பை.. சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சங்கர் - சன்ரைசர்ஸ் அணிக்கு 151 ரன்கள் இலக்கு


  மேலும், 2011ம் ஆண்டுக்கு பிறகு சென்னை பிட்ச் எனக்கு மகிழ்ச்சியளிக்க வில்லை எனவும் தோனி தெரிவித்தார். எனக்கு தெரிந்தவகையில் 2011ம் ஆண்டு வரையில் தான் சென்னை பிட்ச் எங்களுக்கு சாதகமாக இருந்தது, அதன் பின்னர் மைதான பராமரிப்பாளர்கள் எவ்வளவு கடினமாக பணியாற்றினாலும் கூட அந்த பிட்ச் எனக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கவில்லை என தோனி தெரிவித்தார். அதே நேரத்தில் மும்பை வான்கடே மைதானத்தை அவர் வெகுவாக புகழ்ந்தார். வான்கடே பிட்ச்சில் பந்து அதிக ஸ்விங் ஆவதில்லை. பனி இல்லாத நேரத்தில் வேகப்பந்துவீச்சுக்கு அதிக நேரம் வான்கடே பிட்ச் சாதகமாக இருக்கும் என தோனி கூறினார்.

  நேற்றைய போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. பஞ்சாப் அணியை 106 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி சென்னை பவுலர்கள் அசரடித்தனர். மிகவும் குறைந்த டார்கெட்டை சேஸ் செய்த சென்னை அணி 26 பந்துகள் மிச்சம் இருக்கையில் வெற்றி இலக்கை கடந்து வெற்றி பெற்றது.
  Published by:Arun
  First published: