முகப்பு /செய்தி /விளையாட்டு / 2021 ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இல்லை

2021 ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இல்லை

 ஐபிஎல் கோப்பை

ஐபிஎல் கோப்பை

டிசம்பர் 24ம் தேதியன்று நடைபெறும் பிசிசிஐ ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் 2 புதிய ஐபிஎல் அணிகளுக்கான அனுமதி வழங்கப்படவுள்ளது. ஆனால் இது 2022 தொடருக்குத்தான் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டிசம்பர் 24ம் தேதியன்று நடைபெறும் பிசிசிஐ ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் 2 புதிய ஐபிஎல் அணிகளுக்கான அனுமதி வழங்கப்படவுள்ளது. ஆனால் இது 2022 தொடருக்குத்தான் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இதன்படி 2021 ஐபிஎல் தொடர் 8 அணிகளுடனேயே நடைபெறும் என்று தெரிகிறது.

கொரோனா பாதிப்பினால் சந்தை நிலவரங்கள் சரியில்லாத காரணங்களினால் 2022-ல்தான் 10 அணிகள் கொண்ட ஐபிஎல் தொடருக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கொரோனா பெருந்தொற்றுப் பரவலால் பொருளாதாரம் இன்னும் மீள முடியாமல் இருக்கும் நிலையில் ஒளிபரப்பாளர்களும் புதிய உரிமையாளர்கள் அணிகளை வாங்குவதிலும் சிக்கல் இருப்பதாக பிசிசிஐ கருதுகிறது.

பிசிசிஐ முடிவில் தலையிட முடியாது என்றாலும் 2021 ஐபிஎல் தொடர் 8 அணிகளுடன் இதுவரை நடத்தப்பட்ட அதே வடிவத்தில்தான் இருக்கும் என்று இரண்டு ஐபிஎல் அணி நிர்வாகத்தினர் கருதுவதாக ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: IPL, IPL 2020