தோனியின் ரசிகர்: ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட தருணம் குறித்து மனம் திறந்த கிருஷ்ணப்பா கவுதம்!

தோனியுடன் கிருஷ்ணப்பா கவுதம்!

தோனியுடன் இதற்கு முன்பாக இரண்டொரு முறை பேசியிருக்கிறேன், ஒரு ரசிகராக அவரிடம் பேசியிருக்கிறேன். அது அவ்வளவு பெரிய உரையாடலாக இருந்ததில்லை.

  • Share this:
சென்னையில் நேற்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பல அனுபவமற்ற வீரர்களும் நல்ல விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். அதில் முதன்மையானவர் கர்நாடகாவைச் சேர்ந்த கிருஷ்ணப்பா கவுதம்.

14வது ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகளின் நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை தொடங்கிய இந்த ஏலம் இரவு வரை நீண்டது. இந்த ஏலத்தில் இதுவரை தேசிய அணிக்காக கலந்து கொள்ளாத Uncapped Players வரிசையில் இடம்பிடித்துள்ள கிருஷ்ணப்பா கவுதமை 9.25 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது. அவரின் அடிப்படை விலையான 20 லட்ச ரூபாயில் இருந்து பல மடங்கு அவரின் ஏல மதிப்பு உயர்ந்தது. இது தொடர்பாக ESPNcricinfo இணையதளத்திற்கு கிருஷ்னப்பா கவுதம் அளித்த பேட்டியில் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

தற்போது இந்திய அணியுடன் வலைப் பந்துவீச்சாளராக இருக்கும் கிருஷ்னப்பா கவுதம் சென்னையில் இருந்து அகமதாபாத்திற்கு சென்று அங்கு வீரர்களுடன் இருக்கிறார். 9.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதை அறிந்த பின்னர் என்னாலும், என் மனைவி, குடும்பத்தினராலும் உணர்ச்சியை அடக்க முடியவில்லை என்றார்.

கிருஷ்ணப்பா கவுதம்!


முதலில் கொல்கத்தாவும், ஹைதராபாத் அணிகளும் தன்னை ஏலத்தில் எடுக்க போட்டா போட்டி போட்டன. பின்னர் ஏலத்தின் முடிவில் தன்னை பெரிய தொகைக்கு சிஎஸ்கே அணி எடுத்தது, இதனையடுத்து ரோகித் சர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் எனது ரூம் கதவை தட்டி என்னை கட்டியணைத்து பெரிய ட்ரீட் தர வேண்டும் என கேட்டனர். இது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.

இந்த செய்தியை பெங்களூருவில் உள்ள என் மனைவியும், பெற்றோரும் டிவியில் பார்த்து ஆனந்த கண்ணீரில் கரைந்தனர். இந்த உணர்வை என்னால் விவரிக்க முடியவில்லை.

தோனியுடன் இதற்கு முன்பாக இரண்டொரு முறை பேசியிருக்கிறேன், ஒரு ரசிகராக அவரிடம் பேசியிருக்கிறேன். அது அவ்வளவு பெரிய உரையாடலாக இருந்ததில்லை. ஆனால் அவரின் தலைமையில் அவருடன் இணைந்து விளையாடும் தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறேன் என்றார் கவுதம்

32 வயதாகும் கிருஷ்ணப்பா கவுதம், கர்நாடக அணிக்காக விளையாடி வருகிறார். ஆஃப் ஸ்பின்னராகவும் ஆல் ரவுண்டராகவும் விளங்கும் இவர் 2018 முதல் 3 ஐபிஎல் சீசன்களில் மொத்தமாக 24 போட்டிகள் மட்டுமே விளையாடியிருக்கிறார். 186 ரன்கள் எடுத்துள்ளதுடன், 13 விக்கெட்களையும் வீழ்த்தியிருக்கிறார்.

2 சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், கடந்த சீசனின் பஞ்சாப் அணிக்காகவும் விளையாடி இருக்கிறார்.

5 ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்பா கவுதமின் பவுலிங் ஆக்‌ஷன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அவரின் பந்து வீச்சு முறை விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறது என தெரியவந்தபோதும் கூட அவர் கர்நாடக அணியில் சேர்க்கப்படவில்லை. இது தனது வாழ்வின் கடுமையான தருணம் என கவுதம் விவரித்தார்.
Published by:Arun
First published: