Home /News /sports /

டெல்லி கேப்பிடல்ஸ்- கொல்கத்தா ஹெட் டு ஹெட் ரெக்கார்ட், ஆடும் வீரர்கள் யார்?- முழு விவரம்

டெல்லி கேப்பிடல்ஸ்- கொல்கத்தா ஹெட் டு ஹெட் ரெக்கார்ட், ஆடும் வீரர்கள் யார்?- முழு விவரம்

பண்ட்- மோர்கன்

பண்ட்- மோர்கன்

ஐபிஎல் 2021 பிளே ஆஃப் கடைசி எலிமினேட்டர் சுற்றில் இன்று ஷார்ஜாவில் ரிஷப் பண்ட் தலைமை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோர்கன் தலைமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. வெல்லும் அணி தோனி தலைமை சிஎஸ்கே அணியை இறுதிப் போட்டியில் சந்திக்கும்.

மேலும் படிக்கவும் ...
  ஷார்ஜாவில் ஐபிஎல் 2021 தொடரில் இலக்கை விரட்டும் அணி 7-ல் 5 போட்டிகளில் வென்றுள்ளன. டெல்லி கேப்பிடல்ஸின் 5-ல் 4 தோல்விகள் இந்த சீசனில் முதலில் பேட் செய்யத் தீர்மானித்ததன் மூலம் விளைந்ததே. ஆகவே இன்று டாஸ் வெல்லும் அணி சேசிங் செய்யும் என்பது உறுதி. மாறாக இலக்கை விரட்டியே 5 போட்டிகளில் வென்றுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. நம்பிக்கை அளவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிஎஸ்கேவிடம் தோற்று இந்தப் போட்டியில் ஆடுகிறது, மாறாக கொல்கத்தா அணி கோலி தலைமை ஆர்சிபியை வெளியேற்றி விட்டு இந்த போட்டிக்கு வந்துள்ளது.

  யுஏஇ சுற்றில் கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 6-ல் வென்றதன் மர்மம் தொடக்க வீரர்களான ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யரின் அதிரடி தொடக்கமே. அய்யர், ஷுப்மன் கில் தொடக்கம் ஜெயசூரியா, கலுவிதரனா தொடக்கங்களை நினைவூட்டுகிறது. சுருக்கமாகக் கூறினால் இவர்கள் தொடக்கம் அனைத்து ஐபிஎல் அணிகளுக்குமே சிம்ம சொப்பனமாக உள்ளது.

  ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணாவின் அதிரடியும் மோர்கனின் பேட்டிங் சொதப்பல்களுக்கு ஈடு கொடுக்கின்றன, தினேஷ் கார்த்திக்கின் உறுதி பிற்பாடு பெரிய அளவில் கைகொடுத்து வருகிறது. பவுலிங்கில் ஷிவம் மாவி, லாக்கி பெர்கூசன், அனைத்திற்கும் மேலாக ஆல்ரவுண்டர் சுனில் நரைன் மற்றும் புதிர் பவுலர் வருண் சக்ரவர்த்தி மிக அருமையாக செட் ஆகியுள்ளனர். ஆல்ரவுண்டர்களாக வெங்கடேஷ் அய்யர், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன் என்று கலக்கல் செய்கின்றனர்.

  அதுவும் அன்று சுனில் நரைன் 21 ரன்களுக்கு 4 விக்கெட் என்று கோலி, டிவில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்ரீகர் பரத் என்று ஆர்சிபி முதுகெலும்பை உடைத்ததோடு, சேசிங்கில் டேன் கிறிஸ்டியனை அடித்த 3 சிக்சர்களும் ஆட்டத்தை சீல் செய்தன. மாறாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் ஏதோ ஒரு குறை இருக்கிறது, அதனால் தோற்கும் அணியாகவே அது தெரிகிறது.

  பிரிதிவி ஷா, ஷிகர் தவான் கிளிக் ஆனால் உண்டு, ரிஷப் பந்த் அதிரடி காட்ட முடியவில்லை. அய்யர் பார்ம் நம்ப முடியவில்லை. பவுலிங்கில் ஆவேஷ் கான் அன்று புல்டாஸ்களாகப் போட்டு சிஎஸ்கேவை வெற்றி பெறச் செய்தார், டாம் கரனை முன்னமேயே முடித்து விட வேண்டும், பவுலிங்கில் நார்ட்யே, ரபாடா கலக்கினால் உண்டு, அஸ்வின் அதிகம் சோதனைகள் செய்யாமல் மரபான ஆஃப் ஸ்பின்களை வீசி புதிர்பந்துகளை கலந்து விட்டால் கொல்கத்தாவை முறியடிக்கலாம்.

  நேருக்கு நேர்: இருஅணிகளும் 28 முறை எதிர்த்து ஆடியுள்ளன. இதில் டெல்லி 12 போட்டிகளிலும் கொல்கத்தா 15 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஷார்ஜாவில் இரு அணிகளும் கடைசியாக மோதிய போது கொல்கத்தா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

  டெல்லி அணி: சுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா, திரிபாதி, மோர்கன், தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன், பெர்கூசன், ஷிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி.

  டெல்லி அணி: ஷிகர் தவான், பிரிதிவி ஷா, ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் அய்யர், ஷிம்ரன் ஹெட்மையர், அக்சர் படேல், அஸ்வின், ரபாடா, டாம் கரன், ஆவேஷ் கான், ஆன்ரிச் நார்ட்யே.
  Published by:Muthukumar
  First published:

  Tags: IPL 2021, Rishabh pant

  அடுத்த செய்தி