Home /News /sports /

IPL2021: கே.கே.ஆர் அட்டகாசமான பந்துவீச்சு.. சரண்டரான பஞ்சாப் - கொல்கத்தாவுக்கு124 ரன்கள் இலக்கு

IPL2021: கே.கே.ஆர் அட்டகாசமான பந்துவீச்சு.. சரண்டரான பஞ்சாப் - கொல்கத்தாவுக்கு124 ரன்கள் இலக்கு

கொல்கத்த நைட் ரைடர்ஸ்

கொல்கத்த நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் திணறிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற கே.கே.ஆர் கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்ஸை கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு இவர்கள் 36 ரன்கள் எடுத்திருந்தனர். பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் சுனில் நரேனிடம் கேட்ச் கொடுத்து கே.எல்.ராகுல் அவுட்டானார். பவர் ப்ளே முடிவில் பஞ்சாப் கிங்ஸ் 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்திருந்தது. ஷிவம் மாவி பந்துவீச்சில் யுனிவெர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் ரன் எதுவும் இல்லை டக் அவுட்டானார்.

    ஷிவம் மாவி வீசிய பந்தை ட்ரைவ் ஆட முயன்று கேட்சானார். நடுவர் அவுட் கொடுக்காததால் தினேஷ் கார்த்திக் ரீவ்யூ கேட்க சொன்னார். ரிவ்யூவில் பந்து பேட்டுக்கு கீழே படுவது தெளிவாக தெரிந்தது கெய்ல் டக் அவுட்டானார். இதனையடுத்து தீபக் ஹூடா களமிறங்கினார். இவரும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை பிரஷித் கிருஷ்ணா பந்துவீச்சில் கே.கே.ஆர் கேப்டன் இயான் மோர்கன் வசம் சிக்கினார். நல்ல லென்தில் வந்த பந்தை தேர்ட் மேன் திசையில் அடிக்க முயன்று கேட்ச் ஆனார். இதனையடுத்து மொத்த சுமையும் மயங்க் அகர்வால் தலையில் விடிந்தது. அட்டாக் செய்வதா இல்லை விக்கெட்டை காப்பாற்றுவதா என்ற குழப்பமான மனநிலையில் ஆடிக்கொண்டிருந்தார். நிக்கோலஸ் பூரன் கொஞ்சம் ஃபார்ட்னர் ஷிப் கொடுத்தார். இதனையடுத்து 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 56 ரன்கள் எடுத்தது. சுனில் நரேன் பந்துவீச்சில் மயங்க் அகர்வால் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். நரேன் வீசிய ஷார்ட் பந்தை அடிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் அடித்து கேட்ச் ஆனார்.

    வருண் சக்கரவர்த்தி ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசி பூரன் இது டி20 போட்டி என்பதை நியாபகப்படுத்தினார். இந்த ஓவரில் 13 ரன்களை எடுத்து ஆச்சர்யமளித்தனர். ஆனால் வருண் தனது அடுத்த ஓவரிலே பூரனை போல்ட் செய்தார். தமிழக வீரர் ஷாருக்கான் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை விளாசிவிட்டு விக்கெட்டை பறிக்கொடுத்தார். பஞ்சாப் வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.  20வது ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்க விட்டு கிறிஸ் ஜோர்டன் மிரட்டினார். அவர் 18 பந்துகளில் 30 ரன்களை எடுத்து அவுட்டானர். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பர்ஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Dinesh Karthik, IPL 2021, Kl rahul, Kolkata, Punjab

    அடுத்த செய்தி