3 ஓவர்களில் 3 விக்கெட்... ஷாக் கொடுத்த பஞ்சாப்.. சுதாரித்த கே.கே.ஆர் - 2வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

20வது ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்க விட்டு கிறிஸ் ஜோர்டன் மிரட்டினார். அவர் 18 பந்துகளில் 30 ரன்களை எடுத்து அவுட்டானார்.

 • Share this:
  நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், மும்பை வான்கடேவில் நடந்து வந்தது. இன்றையப் போட்டி அகமதாபாத்தில் நடந்தது. மும்பை வான்கடே பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக இருந்தது. சென்னை சேப்பாக்கத்தில் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸை தவிர வேறு பேட்ஸ்மேன்கள் யாடும் பெரிதாக ரன்வேட்டையில் ஈடுபடவில்லை. சேப்பாக்கத்தில் நடந்த போட்டிகள் எல்லாம் லோ ஸ்கோரிங் மேட்சாக இருந்தது. அதனால் அகமதாபாத் மைதானம் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு இருந்தது. பவர் ப்ளே முடிவில் பஞ்சாப் கிங்ஸ் 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் பொறுப்பில்லாமல் ஆடினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. கெய்ல் டக் அவுட்டானார். 10 ஒவர்களுக்கு பஞ்சாப் அணியால் 3 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மயங்க் அகர்வால் 31 ரன்களில் அவுட்டானர்.

  ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி 100 ரன்களை தாண்டுமா என்று சந்தேகம் எழுந்தது. கடைசியில் கிறிஸ் ஜோர்டன் கொஞ்சம் கைக்கொடுத்தார். 20வது ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்க விட்டு கிறிஸ் ஜோர்டன் மிரட்டினார். அவர் 18 பந்துகளில் 30 ரன்களை எடுத்து அவுட்டானர். இதன்காரணமாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

  சுப்மான் கில், நித்திஷ் ரானா இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரை ஹென்ரிக்யூஸ் வீசினார். முதல் ஓவரில் ஃபுல்டாஸ் பந்துகள் எல்லாம் வந்தது. ஹென்ரிக்யூஸ் லைன் அன் லென்தில் தடுமாறினார். மூன்று ஃபுல்டாஸ்களை வீசினார். நித்திஷ் ரானா ஃபுல்டாஸ் பந்தில் ஷாருக்கானிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். லைன், லென்த் இல்லையென்றாலும் பஞ்சாப்புக்கு முதல் விக்கெட்டை எடுத்துக்கொடுத்தார் ஹென்ரிக்யூஸ். இதனையடுத்து ஷமியை கொண்டுவந்தார். இந்த ஓவரில் சுப்மான் கில் எல்.பி.டபிள்யூ ஆகி அவுட்டானார். 9 ரன்களுக்கு கே.கே.ஆர் 2 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து சுனில் நரேன் வந்தார். இந்த சீசனில் நரேன் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. இன்றைய போட்டியிலும் அவர் தடுமாறினார். பந்து பேட்டில் மீட் ஆகவில்லை. அர்ஷ்தீப் சிங் ஓவரில் தூக்கி அடித்தார் ரவி பிஷ்னாயி எங்கோ இருந்து ஓடி வந்து அந்தபந்தை பிடித்து நரேனை காலி செய்தார்.

  இதனையடுத்து கேப்டன் இயான் மோர்கன் - திரிபாதி இருவரும் கூட்டணி அமைத்தனர். ஷமி ஓவரில் திரிபாதி ரன் அவுட் கண்டத்தில் இருந்து தப்பினார். மோர்கன் அடித்த பந்து கெய்ல் வசம் சென்றது. திரிபாதி கொஞ்சம் முன்னோக்கி சென்று திரும்பினார். கெய்ல் ஸ்டெம்பை தாக்கினார். ரீப்ளேயில் திரிபாதி உள்ளே வந்தது தெரிய வந்தது. நரேன் கேட்சை பாய்ந்து பிடித்த ரவி பிஷ்னாயி இரண்டு மிஸ் ஃபீல்டு செய்தார். இதன்காரணமாக கே.கே.ஆருக்கு இரண்டு பவுண்டரிகள் கிடைத்தது. பவர் ப்ளே முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது.

  ஷமி, ஜோர்டனை வைத்து கே.எல்.ராகுல் அட்டாக் செய்தார். இயான் மோர்கன் - திரிபாதி இருவரும் நிதானமாக விளையாடினர். 10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த திரிபாதி தேவையில்லாத ஷார்ட்டை ஆடி ஷாருக்கான் வசம் கேட்சாகி 41 ரன்களில் அவுட்டானார். இதனையடுத்து ரஸல் வந்தார். ஷமி யார்கரை கொண்டு ரஸலுக்கு தொல்லை கொடுத்தார். 10 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார் ரஸல். இதனையடுத்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். கொல்கத்தா அணி 16. 4ஓவர்கள் 126 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. தினேஷ் கார்த்திக் பவுண்டரி அடித்து போட்டியை முடித்து வைத்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: