ஐபிஎல் 2021: மும்பை அணியில் முக்கிய மாற்றம்... ஃபீல்டிங்கை தேர்வு செய்தது கே.கே.ஆர்

ஐபிஎல் 2021: மும்பை அணியில் முக்கிய மாற்றம்... ஃபீல்டிங்கை தேர்வு செய்தது கே.கே.ஆர்

MI vs KKR

கடந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தாவை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 • Share this:
  நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற  கொல்கத்தா கேப்டன்  இயன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் மும்பை 21 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 6 முறை மட்டுமே வெற்றியை வசப்படுத்தியுள்ளது.

  இரு அணிகளுமே தங்களது முதல் போட்டியை சேப்பாக்கத்தில் ஆடியுள்ளது. முதல்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை கொல்கத்தா வீரர்கள் எளிதாக எதிர்க்கொண்டனர். டாப் ஆர்டரில் ராணா அதிரடி காட்டினர் கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார்.

  மும்பை அணிக்கு முதல்போட்டி தோல்வியினால் பெரிதாக பிரஷர் எல்லாம் இருக்காது. மும்பை அணி கடைசியாக 2012-ம் ஆண்டு முதல் போட்டியில் வெற்றிபெற்றது.  அதன்பின்னர் முதல்போட்டி  தோல்விதான்.  அந்த சோகம் இந்த தொடர் வரை தொடர்ந்து வருகிறது. ஆனால் அதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் அற்புதமான ஆடி கோப்பை பலமுறை தட்டிச்சென்றுள்ளனர். கடந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தாவை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை அணியில் டி-காக் அணிக்கு திரும்பி உள்ளது பலமாக உள்ளது.

  மும்பை அணியின் ப்ளேயிங் லெவன்
  ரோகித் ஷர்மா, குவிண்டன் டி காக் , இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கிரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, க்ருணல் பாண்ட்யா, ட்ரெண்ட் போல்ட், பும்ரா, ராகுல் சாஹர், மார்கோ ஜென்சன்

  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ப்ளேயிங் லெவன்

  தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன், சுப்மான் கில், நிதிஷ் ரானா, ராகுல் திரிபாதி, ரஸல், ஷாகிப் அல் ஹசன், பேட் கம்மின்ஸ், பிரஷித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி, ஹர்பஜன் சிங்
  Published by:Ramprasath H
  First published: