• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021, KKR vs RCB| என் வழி தனி வழி- ரஜினிகாந்த் பக்தரான ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர்

IPL 2021, KKR vs RCB| என் வழி தனி வழி- ரஜினிகாந்த் பக்தரான ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர்

படிப்பில் சூரப்புலி, விளையாட்டில் ஆல்ரவுண்டர், ரஜினி ரசிகர் வெங்கடேஷ் அய்யர்

படிப்பில் சூரப்புலி, விளையாட்டில் ஆல்ரவுண்டர், ரஜினி ரசிகர் வெங்கடேஷ் அய்யர்

ஆர்சிபி அணிக்கு எதிராக அறிமுகமாகக் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வெங்கடேஷ் ராஜசேகரன் அய்யர் நேற்று அசத்தலாக ஆடி 27 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், பலரும் யார் இந்த வீரர் என்று ஆச்சரியப்படும் வேளையில் அவர் தன்னைப்பற்றி ஒரு போட்டியில் கூறும்போது, தான் ஒரு ரஜினிகாந்த் ரசிகன், வெறியன் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்லார்.

  • Share this:
    ஆர்சிபி அணிக்கு எதிராக அறிமுகமாகக் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வெங்கடேஷ் ராஜசேகரன் அய்யர் நேற்று அசத்தலாக ஆடி 27 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், பலரும் யார் இந்த வீரர் என்று ஆச்சரியப்படும் வேளையில் அவர் தன்னைப்பற்றி ஒரு போட்டியில் கூறும்போது, தான் ஒரு ரஜினிகாந்த் ரசிகன், வெறியன் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்லார்.

    ஈஎஸ்பின் கிரிக் இன்போவுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் தலைவர் (ரஜினிகாந்த்) பக்தன், நான் அவரது படங்களை பலமுறை பார்ப்பேன், அவர் ஒரு லெஜண்ட்.” என்று கூறியுள்ளார், மேலும், அதே பேட்டியில், படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பஞ்ச் டயலாக் ‘என் வழி தனி வழி’ என்பது தனது பஞ்ச் டயலாக்கும்தான் என்கிறார் வெங்கடேஷ் அய்யர்.

    மத்திய பிரதேச அணிக்கு ஆடும் வெங்கடேஷ் அய்யர் அடுத்த இந்திய ஆல்ரவுண்டர் என்று கருதப்படுபவர். மத்தியப் பிரதேசத்துக்காக டி20, 50 ஓவர் கிரிக்கெட்டில் அவர் ஏற்கெனவே கொடி நாட்டியுள்ளார். ம.பி. அணியின் யு-23 கேப்டனாகவும் இருந்துள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விஜய் ஹசாரே உள்நாட்டு ஒருநாள் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 149 பந்துகளில் 198 ரன்கள் விளாசி தெறிக்கவிட்டுள்ளார். இதில் 20 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் அடங்கும். இந்தத் தொடரில் 5 போட்டிகளில் 273 ரன்கள் விளாசினார் வெங்கடேஷ் அய்யர்.

    இந்தூரில் மழை பெய்தால் சென்னையில் லீக் போட்டிகளில் ஆடுபவர் வெங்கடேஷ் அய்யர். சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் 227 ரன்களை விளாசியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 149 ஆகும்.

    வெங்கடேஷ்


    பி.காம் பட்டப்படிப்புடன் சி.ஏ படிப்புக்கும் தன் பெயரை என்ரோல் செய்துள்ளார் வெங்கடேஷ் அய்யர். 2016-ல் சி.ஏ இண்டர் பரீட்சையில் டாப் மதிப்பெண் பெற்றார். சிஏ பைனல் என்றால் கிரிக்கெட்டை விட்டு விட வேண்டிய நிலை ஆனால் கிரிக்கெட்டுக்காக சிஏ படிப்பைக் கைவிட்டு எம்.பி.ஏ. பைனான்ஸ் படிக்க முயற்சி செய்தார், எப்போதும் ஒரு பிரகாசமான மாணவராக இருந்துள்ளார். படிப்பில் சூரப்புலியாகத் திகழ்ந்துள்ளார். அவரே கூறுவது போல் ஐஐடியிலோ ஐஐஎம்-லோ அவர் பெரிய ஆளாக முடிந்திருப்பார், ஆனால் கிரிக்கெட்டை தேர்வு செய்து அதில் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார்.

    2018-ல் டெலாய்ட் அக்கவுண்டிங் நிறுவனத்தில் இவருக்கு பெங்களூரு தலைமை அலுவலகத்தில் வேலை கிடைத்தது. அந்த வாய்ப்பை வேண்டாம் என்று உதறினார் டிசமப்ரிலேயே மத்தியப்பிரதேச ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். இவர் இந்தியாவின் அடுத்த ஆல்ரவுண்டர் என்று இர்பான் பதான், மனோஜ் திவாரி போன்றவர்கள் அறுதியிடுகின்றனர், அப்படி அவர் முன்னேறி வர நாமும் வாழ்த்துவோமே.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: