ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘என்றென்றும் புன்னகை’ அதுதான் எங்கள் முத்திரை: கேன் வில்லியம்சன் எனும் அற்புத மனிதன்

‘என்றென்றும் புன்னகை’ அதுதான் எங்கள் முத்திரை: கேன் வில்லியம்சன் எனும் அற்புத மனிதன்

கேன் வில்லியம்சன், ஜேசன் ராய்.

கேன் வில்லியம்சன், ஜேசன் ராய்.

ஐபிஎல் 2021 தொடரின் 40வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிர்ச்சித் தோல்வியை பரிசாக அளித்தது. இதில் கேன் வில்லியம்சன் அழகாக முடித்தார், ஜேசன் ராய் கட்டுப்பாட்டுடன் கூடிய ஆக்ரோஷ இன்னிங்ஸை ஆடினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கேன் வில்லியம்சன் என்ற அற்புத கேப்டன் ஒரு அற்புத மனிதனாகவும் திகழ்கிறார், கேப்டன் கூல் என்று நாம் தோனியை ஆளுமையாகப் பார்த்த காலம் போய் எப்போதும் புன்னகையுடன் ஆட வேண்டும் என்று விராட் கோலி போன்ற நியூராடிக் அங்க சேட்டை வீரருக்கு பாடம் எடுப்பது போல் கூறுகிறார் கேன் வில்லியம்சன். ஸ்டீவ் வாஹ் போன்ற ஒரு மன உறுதியுடன் ஸ்டீவ் வாஹிடம் இல்லாத எப்போதும் புன்னகை, என்றென்றும் புன்னகை என்ற ஒரு அதிசய கலவை நிறைந்த அற்புதன் தான் கேன் வில்லியம்சன்.

9வது ஓவரில் சிக்ஸ் அடித்தால் முஷ்டியை உயர்த்துவதும் லார்ட்ஸ் பால்கனியில் டான்சிங் ரோஸ் போல் தன்னை வெளிப்படுத்தும் நாடகீய அணுகுமுறையை கோலியிடம் பார்த்த பிறகு கேன் வில்லியம்சன் தோல்வியிலும் தன் புன்னகையை விட்டு விடாமல் இருக்கிறார் என்பதுதான் அனைத்து கேப்டன்களுக்குமான பாடமாகும்.

நேற்று ஆட்டம் முடிந்து அவர் பேசியது அத்தகைய ஒரு மனிதார்த்த ஸ்பிரிட் சம்பந்தப்பட்டதே, “நல்ல உணர்வு. எங்கள் ஆட்டம் முன்னேற்றம் கண்டுள்ளது. யார் யார் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவு ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றியிலிருந்து மேலும் கட்டமைக்க வேண்டும். இளம் வீரர்கள் வாய்ப்பை பயன்படுத்தி கிரிக்கெட்டை முதலில் மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும். பந்து வீச்சில் கடைசி 2 ஓவர்கள் முக்கியம்.

சஞ்சு சாம்சன் அபாரமாக பேட் செய்தார், இன்னும் கூடுதலான ரன்களை எடுக்கப் பார்த்தனர், ஆனால் அந்த 2 கடைசி ஓவர்கள் அற்புதம். பிறகு பேட்டிங்கில் டாப் ஆர்டரில் நல்ல கூட்டணி அமைத்தோம். ஸ்பின் பவுலர்களுக்கு எதிராக நன்றாக ஆடினோம், ஜேசன் ராய் ஒரு ஆற்றலின் புகுத்தல். அவர் திரைக்குப் பின்னால்தான் இருந்தார், ஆனால் எப்போது அழைத்தாலும் இப்படி ஆட தயாராக இருந்தார்.

ஜேசன் ராய் என்ன செய்து கொண்டிருந்தாரோ அதைத்தான் இப்போதும் செய்தார். அபாரமான வீரர், பெரிய பங்களிப்பு. சிஎஸ்கே போன்ற பெரிய அணியை அடுத்து எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் அட்டவணையில் முதலிடம் வகிக்கிறார்கள். வீழ்த்துவது கடினம். ஆனால் இந்த தொடரில் எல்லா அணியும் சிறப்பாகவே உள்ளன. எப்போதும் போல் எங்கள் முகத்தில் புன்னகை தவழவே ஆடுவோம், அப்படித்தான் ஆடுவோம்” என்றார் கேன் வில்லியம்சன்.

ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

Also Read: SRH vs RR IPL 2021: உடைக்க முடியாத ஜேசன் ராய், வில்லியம்சனின் மாறுபட்ட பேட்டிங்... இப்படித்தான் ஆடணும் சஞ்சு

Published by:Muthukumar
First published:

Tags: IPL 2021, Kane Williamson