KKR vs RCB | இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு - தகவல்

KKR vs RCB | இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு - தகவல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

கொல்கத்தா அணியின் வீரர்கள் வருண் சக்கரவரத்தி மற்றும் சந்தீப் சர்மா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

  • Share this:
    கொரோனா தொற்று காரணமாக இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 30-வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேயடித்தில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் கொல்கத்தா அணியின் வீரர்கள் வருண் சக்கரவரத்தி மற்றும் சந்தீப் சர்மா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்ற வீரர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட உள்ளது.



    ஐபிஎல் போட்டி இன்று இரவு நடைபெற உள்ள நிலையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் போட்டி ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிசிசிஐ இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்காத நிலையில், விரைவில் போட்டி ஒத்திவைப்பது குறித்த தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

     
    Published by:Vijay R
    First published: