• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐபிஎல் 2021: அஸ்வின் - சவுதி தகராறு... - விலக்கி விட்ட தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் 2021: அஸ்வின் - சவுதி தகராறு... - விலக்கி விட்ட தினேஷ் கார்த்திக்

வாக்குவாத்த்தில் அஸ்வின்.

வாக்குவாத்த்தில் அஸ்வின்.

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 இன்றைய போட்டியில் டெல்லி அணியை கொல்கத்தா அணி 127 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது, இதில் 20வது ஓவரில் அஸ்வின் ஆட்டமிழந்த போது விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தது.

  • Share this:
    இங்கிலாந்தில் அஸ்வினை வேண்டுமென்றே கோலி உட்கார வைத்த பிறகும், டி20 உலகக்கோப்பை அணியில் சகல்தான் வேண்டும் அஸ்வின் வேண்டாம் என்று கோலி கூறியதாக செய்திகள் வெளியாகின, அதிலிருந்தே அஸ்வினின் அமைதியான குணாம்சத்தில் கீறல் விழத் தொடங்கி விட்டது. இன்று டெல்லி அணி முதலில் பேட் செய்த போது ஸ்டீவ் ஸ்மித் 39, ஷிகர் தவான் 24, ரிஷப் பந்த் 39 ரன்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஸ்கோரை தாண்டவில்லை.

    இதனையடுத்து டெல்லி அணி 127 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் என்று மடிந்தது, சுனில் நரைன், வெங்கடேஷ் அய்யர், பெர்கூசன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஏமாற்றத்தை அளித்த டெல்லி இன்னிங்சின் 20வது ஓவரில் சவுதீ பந்தை அஸ்வின் இறங்கி வந்து அடிக்க முயன்றார் ஆனால் புல் ஷாட் டீப் ஸ்கொயர்லெக்கில் கேட்ச் ஆனது.

    அஸ்வின் வெளியேறும் போது டிம் சவுதி ஏதோ வாய் வார்த்தைகளைப் பயன்படுத்த அஸ்வினும் வாக்குவாதம் புரிந்தார், இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட கொல்கத்தா கேப்டன் மோர்கனும் ஏதோ வார்த்தைகளைப் பயன்படுத்தினார், அஸ்வின் இன்னும் கோபமடைந்து என்ன என்ன என்பது போல் செல்ல தினேஷ் கார்த்திக் குறுக்கே புகுந்து அஸ்வினை விலக்கி விட்டு பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.

    ரிஷப் பந்த் கையில் பட்டு சென்ற பந்துக்கு கூடுதல் ரன் எடுத்தது தொடர்பாக இந்த வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கையில் பட்டுச் சென்றதற்கு கூடுதல் ரன் எடுத்ததை ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட்டாக சிலர் கருத மாட்டார்கள். இப்போது ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட்டாவது ஒன்றாவது எப்படியாவது வெற்றி பெற வேண்டும். இப்படிப்பட்ட மனநிலையில் வீரர்களுக்கிடையே நட்புறவும் ஒற்றுமையும் களத்தில் இருப்பது கடினமே.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: