• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 KKR vs DC| 25 பந்துகளில் 13 தேவை 6 விக். இழப்பு, 4 டக் அவுட்கள், திரிபாதியின் அல்டிமேட் சிக்ஸ்- கொல்கத்தா திக் திக் கணங்கள்

IPL 2021 KKR vs DC| 25 பந்துகளில் 13 தேவை 6 விக். இழப்பு, 4 டக் அவுட்கள், திரிபாதியின் அல்டிமேட் சிக்ஸ்- கொல்கத்தா திக் திக் கணங்கள்

திரிபாதியின் அந்த அல்டிமேட் சிக்ஸ்.

திரிபாதியின் அந்த அல்டிமேட் சிக்ஸ்.

அஸ்வின் ஒரு பந்தை லெந்தில் வீச ராகுல் திரிபாதி கடும் பிரஷரில் இருந்தாலும் ஒரே தூக்குத் தூக்கி சிக்சருக்கு அனுப்ப கொல்கத்தா கொண்டாட டெல்லி வீரர்கள் முகத்தில் ஈயாடவில்லை. 2011 உலகக்கோப்பையில் தோனி அடித்த வின்னிங் சிக்ஸ் போல் இதுவும் ஒரு ஐகானிக் சிக்ஸ்தான். 

  • Share this:
    ஐபிஎல் 2021 பிளே ஆஃப் கடைசி போட்டியில் கொல்கத்தா அருமையாக 136 ரன்கள் இலக்கை விரட்டி கட்டுக்குள் வைத்திருந்தனர், ஆனால் திடீரென ஆட்டத்தில் திருப்பு முனை ஏற்பட சீட்டு நுனி மேட்ச் ஆனது, கடைசியில் அஸ்வினின் ஹாட்ரிக் பந்தை திரிபாதி சிக்சருக்குத் தூக்க கொல்கத்தா வெற்றி பெற்றது.

    சுப்மன் கில் (46), ஆட்ட நாயகன் வெங்கடேஷ் அய்யர் (55) அருமையான தொடக்கத்தில் 12.2 ஓவர்களில் 96 ரன்களைச் சேர்த்து அபாரமாக ஆடினர், குறிப்பாக வெங்கடேஷ் அய்யர் ரபாடாவை மேலே ஏறி வந்து லாங் ஆனில் அடித்த சிக்ஸ் இவர் ஒரு வேற லெவல் வீரர் என்பதை பறைசாற்றியது. மொத்தம் 4 பவுண்டரி 3 சிக்சர்களை இவர் விளாச சுப்மன் கில் ஒரு பவுண்டரி 1 சிக்சர் என்று அய்யருக்கு ஸ்டாண்ட் கொடுத்தார்.

    ஆட்டத்தின் திடீர் திருப்பு முனையாக 25 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வெற்றி வெகுஎளிது எனும்போது டெல்லி கேப்பிடல்ஸிடமிருந்து ஒரு ஃபைட் பேக் பவுலிங். வெங்கடெஷ் அய்யரை ரபாடா வீழ்த்த, சுப்மன் கில் ஆவேஷ்கானிடம் வீழ்ந்தார் நிதிஷ் ராணா நார்ட்யேவிடம் 13 ரன்களில் விழுந்தது திருப்பு முனை ஏற்படுத்த, தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன் இருவரும் முறையே நார்ட்யே, ரபாடாவிடம் டக் அவுட் ஆக, கடைசி ஓவரில் ஷாகிப் அல் ஹசன், அதிரடி வீரர் சுனில் நரைன் இருவரையும் அடுத்தடுத்து அஸ்வின் டக் அவுட் ஆக்க 2 பந்துகள் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டம் திக் திக் கணங்கள் ஆயிற்று.

    கடைசி ஓவரில் கலக்கிய அஸ்வின்.


    சுனில் நரைன் ஷாட்டை தூக்கி டீப்பில் அடித்து கேட்ச் ஆனதால் ரன்னர் முனையில் இருந்த திரிபாதி பேட்டிங் முனைக்கு வந்தார், இதுதான் முக்கியம், இல்லையெனில் லாக்கி பெர்கூசன் பேட்டிங்  முனையில் இருந்திருந்தால் டெல்லிக்கு வெற்றி வாய்ப்பு. இங்குதான் சுனில் நரைன் அடித்த ஷாட் கேட்ச் ஆனாலும் அவர் டக் அவுட் ஆனாலும் மிக முக்கியமானது, ராகுல் திரிபாதியை பேட்டிங் முனைக்குக் கொண்டு வந்த ஷாட் அது.

    அஸ்வின் ஒரு பந்தை லெந்தில் வீச ராகுல் திரிபாதி கடும் பிரஷரில் இருந்தாலும் ஒரே தூக்குத் தூக்கி சிக்சருக்கு அனுப்ப கொல்கத்தா கொண்டாட டெல்லி வீரர்கள் முகத்தில் ஈயாடவில்லை. 2011 உலகக்கோப்பையில் தோனி அடித்த வின்னிங் சிக்ஸ் போல் இதுவும் ஒரு ஐகானிக் சிக்ஸ்தான்.  ஒன்றுமில்லாத மேட்சை ஒரு மேட்சாக்கியதில் டெல்லிக்கும் பெருமை உண்டு, ஆனால் கொல்கத்தா சிஎஸ்கேவிடம் இப்படி ஆடினால் தோனி நிச்சயம் நசுக்கி விடுவார்.

    எனவே இந்தத் தவறுகளை உண்மையில் திருத்திக் கொள்ள வேண்டும். இயான் மோர்கன் பேட்டிங்கில் சுத்த வேஸ்ட். இவரை பெரிய ஆள் என்று நினைத்து தினேஷ் கார்த்திக்கை கேப்டன்சியிலிருந்து பாலிடிக்ஸ் செய்து வெளியேற்றினர். ஆனால் இயான் மோர்கன் பெரிய பிஸ்தா என்று பார்த்தால் ஒன்றுமில்லாமல் போய்விட்டார். அக்டோபர் 15ம் தேதி சிஎஸ்கே, கொல்கத்தா இறுதியில் மோதுகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: