• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021: 54 என்று ரகசிய சமிக்ஞை காட்டிய கொல்கத்தா- என்ன பெரிய சீக்ரெட்? சேவாக் கடும் காட்டம்

IPL 2021: 54 என்று ரகசிய சமிக்ஞை காட்டிய கொல்கத்தா- என்ன பெரிய சீக்ரெட்? சேவாக் கடும் காட்டம்

கொல்கத்தா நேற்று காட்டிய 54 என்ற சீக்ரெட் கோட்.

கொல்கத்தா நேற்று காட்டிய 54 என்ற சீக்ரெட் கோட்.

நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 54 என்ற ஒரு சங்கேத மொழியைப் பயன்படுத்தி களத்தில் இருக்கும் கேப்டனுக்கு சமிக்ஞை செய்தது. இதன் அர்த்தம் என்னவென்று சர்ச்சை கிளம்பியுள்ளது.

  • Share this:
    நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 123 ரன்கள் இலக்கை போராடி வென்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தோல்வியை பரிசாக அளித்தது.

    இந்நிலையில் இந்தப் போட்டியில் கொல்கத்தாவின் உத்தி வகுப்பு ஆய்வாளர் பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்த போது மிடில் ஓவர்கள் தருணத்தில் 54 என்ற எண்ணை திடீரென காட்டியது பலரையும் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது, இது என்ன கோட் வேர்ட், சங்கேத மொழி என்று ஐயம் எழுந்தது.

    ரசிகர்கள் முதல் வர்ணனையாளர்கள் வரை 54 என்றால் என்னவென்று மண்டையைப் பிய்த்துக் கொண்டனர். ஆனால் உண்மையில் 54 எதைச் சுட்டுகிறது என்பதில் பெரும் குழப்பமே நிலவியது.

    பெவிலியனில் இருக்கும் பயிற்சியாளர்கள், உத்தி வகுப்பாளர்கள் குறிப்பாக கொல்கத்தா அணியின் இத்தகைய நிபுணர்கள் களத்தில் ஆடும் வீரர்களிடத்திலும் கேப்டனுக்கும் ரகசிய சமிக்ஞை செய்வது இது முதல் முறையல்ல. இது போன்ற சமிக்ஞைகளினால் பெரிய தவறு ஒன்றுமில்லை என்று சேவாக் கூறினாலும் இது கேப்டனின் உள்ளுணர்வை கெடுத்துவிடும், கேப்டனின் முடிவுகளைக் கட்டுப்படுத்துவதாகவே முடியும். இப்படிச் செய்தால் யார் வேண்டுமானாலும் கேப்டனாக இருக்க முடியும் என்கிறார் சேவாக்.

    “இப்படிப்பட்ட ரகசிய சங்கேத மொழியினை நாம் ராணுவத்தில்தான் பார்த்திருக்கிறோம். இங்கு 54 என்ற சங்கேத ரகசிய மொழியின் அர்த்தம் என்னவெனில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பவுலரைப் பயன்படுத்த வேண்டிய திட்டம் என்று நினைக்கிறேன், அதாவது இந்தப் பவுலரை பயன்படுத்துங்கள் என்ற ரகசிய அறிவுரையாக இருக்கலாம்.

    பெவிலியன், டக் அவுட்டிலிருக்கும் நிர்வாகிகள் களத்தில் போராடும் கேப்டனுக்கு இப்படி உதவுகிறார்கள், இதில் தவறில்லை, ஆனால் வெளியிலிருந்து இவர்கள் போட்டியை இவர்கள் கட்டுப்படுத்தினால் யார் வேண்டுமானாலும் கேப்டனாக இருக்க வேண்டியதுதான். இயான் மோர்கனின் உள்ளுணர்வின்படியான முடிவுகளுக்கு என்ன மரியாதை இருக்கிறது? அவர் உலகக்கோப்பையை வென்ற கேப்டன்.

    வெளியிலிருந்து உதவிகள் பெறலாம், ஆனால் கேப்டன் தான் எந்த சமயத்தில் யார் வீச வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். வெளி அறிவுரைகளை கேட்காதீர்கள் என்று கூறவில்லை, சில சமயங்களில் 25வது வீரரிடமிருந்து கூட நல்ல ஆலோசனை வரலாம்.

    கேப்டன் ஏதோ ஒன்றை மறந்து விட்டார், அதை அவருக்கு நினைவுபடுத்த இது போன்ற சீக்ரெட் கோட் பயன்படுத்தினால் தவறில்லை.” என்றார் சேவாக்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: