• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 | பஞ்சாப் அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயத்தது கொல்கத்தா

IPL 2021 | பஞ்சாப் அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயத்தது கொல்கத்தா

KKR vs PBKS

KKR vs PBKS

KKR vs PBKS | IPL 2021 | பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 7 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது.

  • Share this:
    ஐபிஎல் தொடரின் 45-வது லீக் போட்டியில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் துபாய் மைதானத்தில் இன்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார்கள். சுப்மன் கில் 7 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அவரை தொடர்ந்து களமிறங்கிய திரிபாதி உடன் வெங்கடேஷ் பார்டன்ர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினார்கள்.

    அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 49 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 67 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். திரிபாதி 34 ரன்னிலும் கேப்டன் இயான் மோர்கன் 2 ரன்னில் அவுட்டாகினர். சற்று அதிரடியாக ரானா 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

    கொல்கத்தா அணி இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: