• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு... டெல்லி அணியில் முக்கிய மாற்றம்

கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு... டெல்லி அணியில் முக்கிய மாற்றம்

IPL 2021

IPL 2021

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

  • Share this:
    ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றின் இராண்டாவது குவாலிஃபையர் போட்டியில் டெல்லி - கொல்கத்தா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் சிஎஸ்கே அணி உடன் மோதும். இறுதிப் போட்டிக்கு முனைப்பு காட்ட இரண்டு அணிகளும் போட்டி போடும் என்பதால் இன்றையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    சார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். ப்ளே ஆப் சுற்றில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி தோல்லியடைந்தது. அதே சமயம் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சேஸிங் செய்த கொல்கத்தா அணி வெற்றி பெற்று இருந்தது என்பது குறிப்பிடதக்கது.

    கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில் டெல்லி அணியில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை தேர்வு செய்துள்ளனர். டெல்லி அணியில் டாம் கரனுக்கு பதிலாக ஸ்டோனிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    டெல்லி அணி : ப்ரித்திவ் ஷா, ஷிகார் தவான், ஸ்ரேயாஷ் ஐயர், ரிஷப் பந்த், மார்கஸ் ஸ்டோனிஸ், ஷிர்மன் ஹெட்மயர், அக்ஷர் படேல், ரவிசந்திரன் அஸ்வின், ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே

    கொல்கத்தா அணி : சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரபாதி, நிதிஷ் ரானா, இயான் மோர்கன், தினேஷ் காத்திக், சுனில் நரைன், ஷகிப் உல் ஹசன், பெர்குசன், ஷிவம் மவி, வருண் சக்கரவர்த்தி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: