CSK vs KKR | கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு... சென்னை அணியில் முக்கிய மாற்றம்

CSK vs KKR | கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு... சென்னை அணியில் முக்கிய மாற்றம்

CSK vs KKR

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு தேர்வு செய்துள்ளது.

  • Last Updated :
  • Share this:
    ஐ.பி.எல் 2021 தொடரின் 15-வது லீக் போட்டியில் சி.எஸ்.கே - கே.கே.ஆர் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கே.கே.ஆர் அணி கேப்டன் இயான் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    சென்னை அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ பதிலாக லுங்கி நிகிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிராவோவிற்கு இந்த போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

    இரு அணிகளும் இதற்கு முன் 25 முறை மோதியுள்ளனர். இதில் சென்னை அணி 15 முறை வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 9 முறை வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
    Published by:Vijay R
    First published: