• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • MI vs KKR | கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு... ஹிட்மேன் பேக்... விளையாடும் 11 வீரர்கள் விவரம்

MI vs KKR | கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு... ஹிட்மேன் பேக்... விளையாடும் 11 வீரர்கள் விவரம்

MI vs KKR

MI vs KKR

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 34-வது லீக் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. அபுதாபியல் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். முதல் போட்டியில் அடைந்த தோல்வியிலிருந்து மீள மும்பை இந்தியன்ஸ் இன்றையப் போட்டியில் முனைப்பு காட்டும். அதே நேரத்தில் கடைசி போட்டியில் வெற்றியடைந்த உத்வேகத்துடன் கொல்கத்தா அணி இருப்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிகள் நேருக்கு நேர் 28 முறை மோதியுள்ளன. இதில் மும்பை ஆதிக்கம் செலுத்தி 22 வெற்றிகளை பெற்றுள்ளது. கொல்கத்தா 6 முறையே மும்பையை வென்றுள்ளது. இன்று இந்த புள்ளி விவரம் மாறும் என்று எதிர்பார்க்கலாம்.

    மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா திரும்பி உள்ளது அந்த அணிக்கு பலமாக இருக்கும். அதே நேரம் கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் இல்லை. கடைசி போட்டியில் இடம் பெற்ற வீரர்களே மும்பை அணிக்கு எதிராக விளையாட உள்ளனர்.

    இரு அணிகளின் விளையாடும் 11 வீரர்கள்

    மும்பை : டி-காக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், சவுரப் திவாரி, கிரன் பொல்லார்டு, குர்ணால் பாண்டியா, ஆடம் மைல்ன், ராகுல் சாஹர், ஜஸ்ப்ரித் பும்ரா, டிரெண்ட் போல்ட்

    கொல்கத்தா : சுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி, நித்திஷ் ராணா, இயான் மார்கன், தினேஷ் கார்த்திக், ஆண்டருவ் ரஷல், சுனில் நரைன், ஃபெர்குஷன், வருண் சக்கரவர்த்தி, பிரதிஷ் கிருஷ்ணா

    POINTS TABLE:

    SCHEDULE TIME TABLE:

    ORANGE CAP:

    PURPLE CAP:

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: