Home /News /sports /

கிறிஸ் கெய்ல் என்ன யூஸ் அண்ட் த்ரோ பொருளா?-பஞ்சாப் மீது பீட்டர்சன் காட்டம்

கிறிஸ் கெய்ல் என்ன யூஸ் அண்ட் த்ரோ பொருளா?-பஞ்சாப் மீது பீட்டர்சன் காட்டம்

கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல்

பயோ-பபுள் என்ற கொரோனா பாதுகாப்பு வளையத்தைக் காரணம் காட்டி பஞ்சாப் கிங்ஸ் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகினார். ஆனால் அவர் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார் என்று கெவின் பீட்டர்சன் சாடியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    உலகக்கோப்பை டி20-க்கு முன்பாக தனக்கு பிரேக் வேண்டுமென்றும் மே.இ.தீவுகள் அணிக்கு உதவிபுரிய தான் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறேன் என்றும் அவர் செப்டம்பர் 30ம் தேதி அறிவித்து வெளியேறினார். “மனரீதியாக புத்துணர்வு பெறவும் உலகக்கோப்பை டி20 அணிக்காக மே.இ.தீவுகளுக்கு உதவி புரிய போதிய மன அவகாசமும் மனத்தெளிவும் வேண்டும்” என்று கிறிஸ் கெய்ல் தெரிவித்தார்.

    இந்நிலையில் கெவின் பீட்டர்சன் என்ன கூறுகிறார் எனில், கிறிஸ் கெய்லுக்கு அவரது 42வது பிறந்த தினத்தன்று விளையாட பஞ்சாப் கிங்ஸ் வாய்ப்பளிக்கவில்லை என்றார். 2 போட்டிகளில் ஆடினார் ஆனால் 1 மற்றும் 14 ரன்களையே கெய்ல் எடுத்தார். மேலும் இந்த சீசனில் அவர் 10 போட்டிகளில் 193 ரன்களையே எடுக்க முடிந்தது. அதனால் அவரை எடுப்பதும் விடுவதுமாகப் பயன்படுத்தினர், கெய்லுக்கும் இது மறக்க வேண்டிய ஒரு சீசனாகப்போனது.

    கெவின் பீட்டர்சன் கூறும்போது, “அவரை சரியாக நடத்தவில்லை என்றே நினைக்கிறேன். அதாவது தன்னை யூஸ் செய்கிறார்கள், பிறகு தூக்கி எறிகிறார்கள் என்று கெய்ல் உணர்ந்திருக்க வாய்ப்புண்டு. யூஸ் அண்ட் த்ரோ கலாச்சாரம் ஐபிஎல் கிரிக்கெட்டில் உண்டு. அவரது பிறந்த தினத்தில் அவரை ஆடவிடாமல் விலக்கினர். அவர் மகிழ்ச்சியடையவில்லை எனில் 42 வயது நபருக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் செய்ய உரிமை உண்டு” என்றார்.

    இந்திய லெஜண்ட் சுனில் கவாஸ்கரும் கூறும்போது, “கெய்ல் போன்ற ஆட்டத்தையே மாற்றக்கூடிய கேம் சேஞ்சர் அணியில் இல்லை என்றால் அது அந்த அணிக்கு பெரிய இழப்புத்தான். என்ன கணக்கீடுகள் என்பது எனக்குத் தெரியவில்லை. 4 வெளிநாட்டு வீரர்கள் தான் ஆட முடியும். அவருக்கு பதிலாக எடுக்கும் வீரர் சரியாக ஆட முடியாது போய், 40 வயதிலும் கெய்ல்தான் ஆடுவார் என்ற நிலை இருந்தால் அவரது இழப்பு நிச்சயம் உணரப்படும்.

    ஆனால் கெய்ல் ஒரு கேம் சேஞ்சர், 3 ஓவர் கெய்ல் ஸ்டார்ம் அடித்தால் அவ்வளவுதான் எதிரணியிடமிருந்து ஆட்டம் பறந்து விடும்” என்றார்.

    Also Read: வரலாறு படைத்த பாபர் ஆசம் : விராட் கோலி, கிறிஸ் கெய்லை முறியடித்து மைல்கல்

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Chris gayle, IPL 2021

    அடுத்த செய்தி