தன்னை அவமானப்படுத்தி நீக்கிய இங்கிலாந்தை பழிவாங்கும் கெவின் பீட்டர்சன்

கெவின் பீட்டர்சன்.

தேசிய அணியின் கடமைக்குப் பிறகே ஐபிஎல் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறி வருகிறது,  ஆனால் கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து வீரர்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும், என்று உசுப்பேற்றி வாரியத்துக்கு எதிராக கிளப்பி விடுகிறார். 

 • Share this:
  இங்கிலாந்து வீரர்கள் ஒன்று திரண்டு நிமிர்ந்து நின்றால் மீதமிருக்கும் ஐபிஎல் 2021 போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடலாம் என்று கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து வீரர்களை உசுப்பேற்றி விட்டுள்ளார்.

  அதாவது தேசிய அணியின் கடமைக்குப் பிறகே ஐபிஎல் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறி வருகிறது,  ஆனால் கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து வீரர்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும், என்று உசுப்பேற்றி வாரியத்துக்கு எதிராக கிளப்பி விடுகிறார்.

  தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கெவின் பீட்டர்சன் இங்கிலாந்துக்கு ஆடி கேப்டனாகவும் ஆக்கப்பட்டார், ஆனால் தொடர்ச்சியாக அவர் அவமானப்படுத்தப்பட்டார், தோற்கும் போதெல்லாம் அவர் பேட்டிங்கில் சரியாக ஆடாத போதெல்லாம் என்ன இருந்தாலும் தென் ஆப்பிரிக்காக் காரர்தானே என்று ஏளனம் செய்தனர். இவர் பேசும் ஆங்கிலம் பிரிட்டிஷ் கிளாசிக் பாணியில் இல்லாததும் அவ்வப்போது விமர்சனமாக வெளி வந்தது.

  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 0-5 என்று ஒயிட்வாஷ் தோல்வியைச் சந்தித்த போதும் கூட அந்தத் தொடரில் கெவின் பீட்டர்சந்தான் அதிகபட்ச மொத்த ரன்களை எடுத்தார், ஆனால் ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன், உள்ளிட்டோர் விரித்த சதிவலைக்கு இலக்காகி அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

  அசிங்கமான முறையில் உள்குத்து வேலை செய்து அவரை வெளியேற்றி அவமானப்படுத்தியதை எதிர்த்தார், அப்போது அவருக்கு ஆதரவாக ஒரு இங்கிலாந்து வீரர் கூட இல்லை.

  இன்று நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி20 போட்டித் தொடர் மீண்டும் நடத்தப்பட்டால் இங்கிலாந்து வீரர்கள் விளையாடமாட்டார்கள், அவர்களுக்கு தேசிய அணியின் கடமை இருக்கிறது என்று இங்கிலாந்து அணயின் இயக்குனரும் முன்னாள் இடது கை ஸ்பின்னருமான ஆஷ்லே ஜைல்ஸ் தெரிவித்துள்ள நிலையில் இங்கிலாந்து ஐபிஎல் வீரர்கள் ஒன்று திரண்டு எழுந்து நின்றால் இதனை முறியடிக்கலாம் என்று உசுப்பேற்றி விட்டுள்ளார்.

  இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஐபிஎல் டி20 தொடர் மீண்டும் நடத்தப்பட்டால், தங்களின் சிறந்த வீரர்களை அதில் விளையாடவிடாமல் எவ்வாறு இங்கிலாந்து அணி தடுக்கப் போகிறது என்பதைப் பார்க்கவும், என்ன நடக்கும் என்பதை அறியவும் ஆர்வமாக இருக்கிறது.

  நான் இங்கிலாந்து அணிக்கு எதிராக நின்றபோது என்னுடன் யாருமில்லை, தனியாக இருந்தேன். இந்த நேரத்தில், இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த வீர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து நின்றால், ஒற்றுமையாக இருந்தால், அவர்கள் ஐபிஎல் டி20 தொடரில் விளையாட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

  தன்னை இங்கிலாந்து அணி அவமானப்படுத்தியதற்கு இத்தனை ஆண்டு கழித்து ஐபிஎல் தொடரை முன்னிட்டு இங்கிலாந்து வீரர்களை உசுப்பேற்றி விட்டுள்ளார் கெவின் பீட்டர்சன்.
  Published by:Muthukumar
  First published: