• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021: கார்த்திக் தியாகியின் கடைசி ஓவர் - பும்ராவுக்கு மெசேஜ்

IPL 2021: கார்த்திக் தியாகியின் கடைசி ஓவர் - பும்ராவுக்கு மெசேஜ்

கார்த்திக் தியாகி கொண்டாட்டம்

கார்த்திக் தியாகி கொண்டாட்டம்

கார்த்திக் தியாகி ராஜஸ்தான் ராயல்ஸ் ஹீரோவாக நேற்றைய ஐபிஎல் 2021 போட்டியில் எழுச்சி பெற்றுள்ளார். கடைசி ஓவரில் 4 ரன்கள் அதுவும் 8 விக்கெட்டுகள் கையில் உள்ளன பஞ்சாப் அணிக்கு, இதைத் தடுத்தாட்கொண்டு வெற்றி பெறுவதெல்லாம் சாதாரண காரியமல்ல, ஹீராயிக் முயற்சியாகும் என்று கார்த்திக் தியாகியை பாராட்டதவர்கள் இல்லை என்றே கூறிவிடலாம்.

  • Share this:
    கார்த்திக் தியாகி ராஜஸ்தான் ராயல்ஸ் ஹீரோவாக நேற்றைய ஐபிஎல் 2021 போட்டியில் எழுச்சி பெற்றுள்ளார். கடைசி ஓவரில் 4 ரன்கள் அதுவும் 8 விக்கெட்டுகள் கையில் உள்ளன பஞ்சாப் அணிக்கு, இதைத் தடுத்தாட்கொண்டு வெற்றி பெறுவதெல்லாம் சாதாரண காரியமல்ல, ஹீராயிக் முயற்சியாகும் என்று கார்த்திக் தியாகியை பாராட்டதவர்கள் இல்லை என்றே கூறிவிடலாம்.

    இது குறித்து கார்த்திக் தியாகியே கூறும்போது, “அது எனக்கு செய் அல்லது செத்துமடி சூழ்நிலை, சரியான பந்துகளை வீசுவதில்தான் கவனம் செலுத்தினேன். பலரும் வந்துபலவிதமான அட்வைஸ்களை கொடுத்தனர், ஆனால் என்மனதில் 6 யார்க்கர்கள் அவ்வளவுதான் மேட்டர் என்று முடிவெடுத்துக் கொண்டேன். அதைத்தான் செய்தேன், அது எனக்கு விழவும் செய்தது ஆச்சரியமே. அனைவரும் நடு மைதானத்துக்கு வந்து கொண்டாடியது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

    நன்றாக ஆடிவந்த நிகோலஸ் பூரன் 3வது பந்தில் சாம்சனிடம் கேட்ச் ஆனார். தீபக் ஹூடா வந்து ஒரு டாட் பால் பிறகு அடுத்த பந்தே அவுட். கடைசி பந்தை எதிர்கொள்ள வெஸ்ட் இண்டீஸின் ஃபேபியன் ஆலன் வந்தார். அவரால் கனெக்ட் செய்ய முடியாத பந்தை வீசினார் கார்த்திக் தியாகி. இவரது இந்த ஸ்பெல்லை பார்த்த ஜஸ்பிரித் பும்ரா தன் ட்விட்டர் பக்கத்தில் வியந்து போய் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

    பும்ரா தன் ட்விட்டர் பக்கத்தில், “வாட் அன் ஓவர் கார்த்திக் தியாகி. அதுவும் அந்த மாதிரியான ஒரு நெருக்கடியில் மிகவும் கூலாக இருந்து காரியத்தை முடிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். மிகவும் பிரமாதம்” என்று ட்வீட் செய்து புகழ்ந்து தள்ளியுள்ளார், இளம் பவுலருக்கு பும்ராவிடமிருந்து இப்படி ஒரு பாராட்டுக் கிடைப்பது அரிதல்லவா. அதுவும் அவர் போட்டியைப் பார்த்துள்ளார் என்பதுதான் சிறப்பானது.

    பும்ராவின் ட்விட்டர் வாழ்த்துக்குப் பதில் அளித்த கார்த்திக் தியாகி, “என் ஹீரோவிடமிருந்து பாராட்டைப் பெறுவது பேருணர்வை ஏற்படுத்துகிறது” என்று பதில் அனுப்பியுள்ளார்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: