ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐபிஎல் கேப்டன்சி தோனியை பின்பற்றும் இளம்வீரர்கள் - ஜோஸ் பட்லர் கருத்து

ஐபிஎல் கேப்டன்சி தோனியை பின்பற்றும் இளம்வீரர்கள் - ஜோஸ் பட்லர் கருத்து

தோனி

தோனி

பட்லர் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் உருவாவதற்கு மகேந்திர சிங் தோனி தான் முக்கிய பங்கு வகிக்கிறார் என இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார்.

  நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 8 அணிகளில் நான்கு அணிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் கேப்டனாக உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியதில் இருந்து தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ், கே.எல்.ராகுல் பஞ்சாப் கிங்ஸ், ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்துகிறார்கள்.

  மகேந்திர சிங் தோனி ஒரு அற்புதமான வீரர். பல இளம் கிரிக்கெட்டர்கள் தோனியின் வழித்தடத்தை பின்பற்றி வருகின்றனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் கேப்டன்களாக உருவெடுத்துள்ளனர். விக்கெட் கீப்பருக்கு தான் ஆட்டத்தின் மீதான பார்வை கூர்மையாக இருக்கும். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப முடிவுகளை ஏற்க முடியும். பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் தன்மையை அறிந்து அதற்கேற்ற வகையில் முடிவு எடுக்கலாம்.” என்றார்.

  பட்லர் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். சஞ்சு சாம்சன் குறித்து பேசிய பட்லர், “ சஞ்சு அற்புதமான வீரர். மிகவும் அமைதியாக இருப்பார். அவரது தலைமையின் கீழ் விளையாடுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்.” என்றார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: IPL 2021, MS Dhoni, Rajasthan Royals, Rishabh pant, Sanju Samson