சேட்டை புடிச்ச பையன் சார் இந்த ஜடேஜா - வைரலாகும் வீடியோ

ஜடேஜா

வழக்கமாக ஜடேஜா அரைசதமோ, சதமோ விளாசினால் பேட்டை வாளை சுழற்றுவது போல் சுழற்றி தனது மகிழ்ச்சியை கொண்டாடுவார்

 • Share this:
  மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஜடேஜாவின் அபாரமான ஃபீல்டிங் நேற்றைய ஆட்டத்திலும் வெளிப்பட்டது. சென்னை அணி ஆரம்பத்தில் இருந்த ரன்ரேட்டை வைத்து பார்த்தபோது 200 க்ராஸ் செய்யும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். சென்னை அணியின் மிடில் ஆர்டர் கவலை அளிக்கும் விதமாக இருந்தது. ரெய்னா. ஜடேஜா, தோனி மூவரும் பெரிதாக ரன்வேட்டையில் ஈடுபடவில்லை. மூவரும் பேட்டிங்கில் தடுமாறினர்.

  ரெய்னா அடிப்பாருன்னு எதிர்பார்த்தா மொயின் அலி அடித்தார். அவர் அவுட்டானதும் அடிப்பாருன்னு பார்த்த அடுத்து வந்த அம்பத்தி ராயுடு சிக்ஸர்களாக விளாசி வெளியேறினர். ஜடேஜா வந்ததும் ரெய்னா பெவிலியன் திரும்பினார். தோனி, ஜடேஜாவும் பந்துக்கு வலிக்காதமாறியே அடித்தனர். தோனி எதிர்க்கொண்ட முதல் 6 பந்துகள் எல்லாம் வேற ரகம். 13-வது ஓவருக்கு பிறகு 17-வது ஓவரில்தான் ஒரு பவுண்டரி வந்தது. பந்தை வேகமாக அடிக்கமுற்பட்டு தோனி கேட்சாகி வெளியேறினார். பிராவோ கடைசியில் ஒரு காட்டுகாட்ட சென்னை அணி 188 ரன்கள் எடுத்தது.

  இதனையடுத்து கடந்த போட்டியில் பவர் ப்ளேயில் விக்கெட்டுகளை அள்ளிய தீபக் சஹர் இந்தப் போட்டியில் சொதப்பினார். முதல் 10 ஓவர்களில் சென்னை பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர்.ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. பட்லர் அதிரடியாக விளையாடினார். ஜடேஜாவும், மொயீன் அலியும் சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். பேட்டிங்கில் சொதப்பிய ஜடேஜா ஃபீல்டிங்கில் தான் கில்லி என்பதை மீண்டும் நீருபித்தார்.12வது ஓவரை வீசிய ஜடேஜா ஜாஸ் பட்லரை க்ளீன் போல்ட் செய்து சென்னை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதேஓவரில் சிவம் துபேவை எல்.பி.டபள்யூ செய்தார். அடுத்த ஓவரில் மில்லரை, எல்.பி.டபிள்யூ செய்தார் மொயீன் அலி. ஆட்டம் சென்னை பக்கம் திரும்பியது.

     ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமில்லாமல், மனன் வோரா, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் கேட்ச்களைப் பிடித்து அவுட் செய்தார். ரியான் பராக் கேட்சை பிடித்த ஜடேஜா பந்தை எல்லைக்கோட்டில் வைப்பது போல் ஆக்‌ஷன் செய்தார். 4 கேட்ச்களை பிடித்ததை கொண்டாடும் வகையில் புதிய ஸ்டைலில் ஆக்‌ஷன் செய்தார். வழக்கமாக ஜடேஜா அரைசதமோ, சதமோ விளாசினால் பேட்டை வாளை சுழற்றுவது போல் சுழற்றி தனது மகிழ்ச்சியை கொண்டாடுவார். இந்த முறை 4 என கைகளில் செய்கை செய்த ஜடேஜா போன் செய்வது போல் ஆக்‌ஷன் செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
  Published by:Ramprasath H
  First published: