CSK vs RCB | IPL 2021| ஹர்ஷல் படேலை உரித்தெடுத்த கடைசி ஓவர் 37 ரன்கள்: தோனி அறிவுரை உதவியதாக ஜடேஜா வெளிப்படை

ஜடேஜா

நேற்று மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் கோலி தலைமை ஆர்சிபி அணிக்கு முதல் தோல்வியை பரிசாக அளித்தது சென்னை சூப்பர் கிங்ஸ், இதற்கு ஒரே காரணம் ரவீந்திர ஜடேஜாவின் ஆல் ரவுண்ட் திறமையே என்றால் மிகையாகாது.

 • Share this:
  நேற்று மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் கோலி தலைமை ஆர்சிபி அணிக்கு முதல் தோல்வியை பரிசாக அளித்தது சென்னை சூப்பர் கிங்ஸ், இதற்கு ஒரே காரணம் ரவீந்திர ஜடேஜாவின் ஆல் ரவுண்ட் திறமையே என்றால் மிகையாகாது.

  191 ரன்களை சென்னை விளாச ஆர்சிபி அணி 3 ஓவர்களில் 44 ரன்கள் என்ற அதிரடி தொடக்கம் கண்டது, படிக்கல் வெளுத்து வாங்கினார், 15 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களென பின்னி எடுத்தார், ஷாட்களில் அத்தனை அதாரிட்டி. ஆனால் ராஜஸ்தான் போல் தொடர்ந்து போட்டுக் கொடுக்க சென்னை என்ன சொம்பையா? ஷர்துல் தாக்கூர் ஷார்ட் பிட்ச் பந்தை படிக்கல் உடலுக்கு நேராக வீச புல் ஷாட் சரியாகச் சிக்காமல் ரெய்னாவிடம் கேட்ச் ஆனது, இது படிக்கல்லின் பலவீனம், இதை நன்றாகப் பயன்படுத்தினார் ஷர்துல். பிறகு ஜடேஜா உள்ளே புக ஆர்சிபி கடைசியில் பரிதாபமாக 122/9 என்று படுதோல்வி அடைந்தது.

  இது போக நேற்று நடந்த இன்னொரு தமாஷ் என்னவெனில் சாம் கரன், டிவைன் பிராவோ, ஏன் ஷர்துல் தாக்கூர் கூட தோனியை விட நிச்சயம் சிறந்த பேட்ஸ்மென்கள்தான், ஆனால் மட்டையிலிருந்து காத்து வரும் தோனி இறங்கினாரே பார்க்கலாம். அனைவருக்கும் கடும் அதிருப்தி, என்னடா இது ஷர்துல் தாக்கூரே நல்ல ஹிட்டர், டிவைன் பிராவோ நல்ல ஹிட்டர் இருக்கும் போது காத்து தோனி எதற்கு இறங்கினார் என்று அவரது ரசிகர்களே சற்றே தங்கள் தல தோனியைக் கடிந்து கொண்டனர்..

  தோனி, ஜடேஜா


  இப்படியிருக்கும் போது தோனியைப் புகழ்ந்தால்தானே அந்த நாள் சிஎஸ்கே வீரர்களுக்கு சிறப்பாக முடிந்ததாக அர்த்தம். அப்படி என்ன தோனி கூறிவிட்டார், மிகவும் சாதாரண விஷயம், கிரிக்கெட் களத்தில் தெரு கிரிக்கெட் முதல் லீக் வரை தொடர்ந்து பல கிரிக்கெட்டிலும் எதிர்முனையில் கூறும் சாதாரண சப்பை அறிவுரைதான், ஆனால் அதை நீங்களோ நாங்களோ கூறினால் ஒன்றுமில்லை சொன்னது தோனியாயிற்றே, அவர் கூறுவதெல்லாம் பொன்மொழிகளென கொண்டாட ஒரு கூட்டம் காத்திருக்கும் போது, அவர் கூறுவதெல்லாம் பொன்மொழிகள்தானே?!

  ரவீந்திர ஜடேஜா தனிமனிதனாக நேற்று ஜெயிக்க வைத்தார், 3 விக்கெட், 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 62 ரன்கள். கடைசி ஹர்ஷல் படேல் ஓவரில் 5 சிக்சர்கள் சாதனையுடன் 37 ரன்கள் சாதனையையும் செய்தார், ஸ்கோர் 191 ரன்களுக்கு சடசடவென முன்னேறியது. ஒரு முக்கியமான ரன் அவுட்டையும் நிகழ்த்தி நேற்று தன் நாள் என்பதை நிரூபித்தார் ஜடேஜா. ஆனால் அவர் டக்கில் இருக்கும் போது கேட்சை விட்டனர். இதுதான் திருப்பு முனையாக அமைந்து விட்டது

  இந்நிலையில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜடேஜா கூறியதாவது:

  இது போன்ற ஒரு சிறந்த நாள் எனக்கு அமைந்ததாகக் கருதவில்லை. அணியின் வெற்றிக்கு பலவிதங்களிலும் பங்களிப்பு செய்வதைப் போல் மகிழ்ச்சி வேறென்ன? நான் என் திறமை, உடல்தகுதியில் கடுமையாகப் பணியாற்றி வருகிறேன். இன்று அதிர்ஷ்டம் கைகொடுத்தது.

  ஒரு ஆல்ரவுண்டராக கடினமே. ஏனெனில் அனைத்திலும் பீல்டிங், பேட்டிங், பவுலிங் என்று நிரூபிக்க வேண்டும். பயிற்சியில் அனைத்தையுமே பயிற்சி செய்வேன். ஒருநாள் திறமையை வளர்த்துக் கொள்ள பயிற்சி எடுப்பேன், மறுநாள் உடற்தகுதியில் கவனம் செலுத்துவேன். கடைசி ஓவரில் பந்தை அடித்து நொறுக்க முடிவெடுத்தேன்.

  ஹர்ஷல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசுவார் என்று தோனி எனக்கு அறிவுறுத்தினார். நான் அதற்குத் தயாராக இருந்தேன். எல்லாம் மட்டையில் மாட்டியது, நாங்கள் 191 ரன்கள் விளாசினோம். எனக்கு ஸ்ட்ரைக் கிடைத்தால் நிச்சயம் ரன் அடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டேன். இன்று என் நாள் அல்ல, ஏனெனில் கேட்ச் பிடிக்கவில்லையே, ஆனால் அதற்குப் பதில் ரன் அவுட் செய்தேன். எனக்கு மகிழ்ச்சியே.

  இவ்வாறு கூறினார் ஜடேஜா.
  Published by:Muthukumar
  First published: