• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Harshal Patel: பந்தயம் கட்டுகிறேன் என் ஸ்லோயர் பந்துகளை கணிக்க முடியாது; ஹாட்ரிக் வீரர் ஹர்ஷல் படேல் சவால்

Harshal Patel: பந்தயம் கட்டுகிறேன் என் ஸ்லோயர் பந்துகளை கணிக்க முடியாது; ஹாட்ரிக் வீரர் ஹர்ஷல் படேல் சவால்

ஹாட்ரிக்கை கொண்டாடும் ஹர்ஷல் படேல்.

ஹாட்ரிக்கை கொண்டாடும் ஹர்ஷல் படேல்.

போலார்டுக்கு அவர் அடிக்க முடியக்கூடிய இடத்தில் வீசினால் சேதம் ஏற்படுத்துவார். அவருக்கு வைடாக வீசுவது என்று ஏற்கெனவே முடிவெடுத்து விட்டோம். அப்போது அவரை ஏமாற்ற முடியும்.

  • Share this:
    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஹாட்ரிக் சாதனை புரிந்த ஆர்சிபி வீரர் ஹர்ஷல் படேல், தன் ஸ்லோயர் பந்துகளை பேட்ஸ்மென்களே கண்டுப்பிடிக்க முடியவில்லை எனில் பவுலர் எப்படிக் கண்டுப்பிடிப்பார் என்று கேட்டுள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, போலார்டு, ராகுல் சாகர் ஆகியோரை 17வது ஓவரில் அடுத்தடுத்து வீழ்த்தினார் ஹர்ஷல் படேல், அவர் நேற்று 3.1 ஓவர் வீசி 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதில் ஹாட்ரிக் பந்தை வீசியது எப்படி என்று ஹர்ஷல் படேல், திட்டமிட்டது உட்பட விளக்கினார். அதில்தான் ஸ்லோ பந்துகளை பேட்டர்களே கணிக்க முடியாத போது பவுலர்கள் எப்படி கணிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

    “பேட்ஸ்மென்களே என் ஸ்லோயர் பந்துகளை சரிவர கணிக்க முடியாத போது டெய்ல் எண்டர்கள் எப்படி கணிக்க முடியும்? அதனால்தான் ராகுல் சாகர் ஹாட்ரிக் விக்கெட் பந்து அப்படிப் போடப்பட்டது. இதை நான் சவாலாகவே தெரிவிக்கிறேன். 6வது முறையாக நான் ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றேன், இந்த முறைதான் ஹாட்ரிக் சாதனை செய்ய முடிந்தது.

    போலார்டுக்கு அவர் அடிக்க முடியக்கூடிய இடத்தில் வீசினால் சேதம் ஏற்படுத்துவார். அவருக்கு வைடாக வீசுவது என்று ஏற்கெனவே முடிவெடுத்து விட்டோம். அப்போது அவரை ஏமாற்ற முடியும். அது உண்மையில் நன்றாகவே வந்தது” என்றார் ஹர்ஷல் படேல். ஹர்ஷல் படேல் இப்போது அதிக விக்கெட்டுகளுக்கான பர்ப்பிள் கேப்புக்குச் சொந்தக்காரர்.

    ஐபிஎல் வரலாற்றில் 3வது ஆர்சிபி வீரர் ஹாட்ரிக் சாதனை புரிந்திருக்கிறார், முதலில் பிரவீன் குமார் 2010-ல் ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் 2017-ல் இதே மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக மே.இ.தீவுகள் பவுலர் சாமுயெல் பத்ரி ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளானர். தற்போது 3வது ஆர்சிபி வீரர் ஹர்ஷல் படேல் சாதித்துள்ளார்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Also Read: கோலிக்கு முதிர்ச்சியே இல்லை, சிக்ஸ் அடித்ததற்கெல்லாம் முஷ்டி உயர்த்துகிறார்: மைக்கேல் வான்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: