• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 KKR vs DC| ‘டெல்லி அணி தோற்கும்- கொல்கத்தா வெல்லும்’

IPL 2021 KKR vs DC| ‘டெல்லி அணி தோற்கும்- கொல்கத்தா வெல்லும்’

டெல்லி-கொல்கத்தா

டெல்லி-கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டெல்லி அணி தோற்றுவிடும், அதன் சாம்பியன் கனவு இன்றோடு முடிந்து விடும் என்று ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

  • Share this:
    ஷார்ஜாவில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தாவுக்கு முன்னால் ரிஷப் பண்ட்டின் டெல்லி அணி நிற்காது என்கிறார் ஆகாஷ் சோப்ரா. இது தொடர்பாக யூடியூப் சேனலில் அவர் காரணங்களை கூறி பிறகு 2020 இறுதிப் போட்டியாளருக்கு இன்றைய தினம் ஐபிஎல் 2021-ல் கடைசி என்று கூறுகிறார் ஆகாஷ் சோப்ரா.

    “கொல்கத்தா வெற்றி பெறும். டெல்லி இன்றோடு முடிகிறது. டெல்லியினால் இன்று போட்டியை வெல்ல முடியாது. இன்றோடு குட் பை சொல்லி விடுங்கள். ஏனெனில் சொந்த கோல்கள், அன்ஃபோர்ஸ்டு எரர்ஸ் மீண்டும் நடக்கும். அன்று சிஎஸ்கேவுக்கு எதிராக 180 ரன்களை அடிக்க முடியாத அளவுக்கு ஒன்றுமில்லை, பிறகு 170 ரன்களை சுலபத்தில் தடுத்திருக்கலாம் ரபாடாவுக்கு ஒரு ஓவர் மீதமிருந்தது. மேலும் ஷார்ஜா மைதானம் உங்களுக்கு சரிப்பட்டு வராது.

    ஒரு பேட்டர் ஸ்டம்ப்டு அவுட் ஆவார் ஏன்? அது எனக்குத் தெரியாது. ஸ்பின்னர்கள் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்துவார்கள். இடது கை தொடக்க வீரர்கள் வலது கை தொடக்க வீரர்களை விட அதிகம் ஸ்கோர் செய்வார்கள். ஆகவே வெங்கடேஷ் அய்யர், ஷிகர் தவான் அதிக ரன்கள் எடுப்பார்கள், ஷுப்மன் கில், பிரிதிவி ஷா அவ்வளவாக ரன் எடுக்க மாட்டார்கள்” என்று ஆகாஷ் சோப்ரா கணிப்பை வெளியிட்டுள்ளார்.

    ஷார்ஜாவில் ஐபிஎல் 2021 தொடரில் இலக்கை விரட்டும் அணி 7-ல் 5 போட்டிகளில் வென்றுள்ளன. டெல்லி கேப்பிடல்ஸின் 5-ல் 4 தோல்விகள் இந்த சீசனில் முதலில் பேட் செய்யத் தீர்மானித்ததன் மூலம் விளைந்ததே. மாறாக இலக்கை விரட்டியே 5 போட்டிகளில் வென்றுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. நம்பிக்கை அளவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிஎஸ்கேவிடம் தோற்று இந்தப் போட்டியில் ஆடுகிறது, மாறாக கொல்கத்தா அணி கோலி தலைமை ஆர்சிபியை வெளியேற்றி விட்டு இந்த போட்டிக்கு வந்துள்ளது.

    யுஏஇ சுற்றில் கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 6-ல் வென்றதன் மர்மம் தொடக்க வீரர்களான ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யரின் அதிரடி தொடக்கமே. அய்யர், ஷுப்மன் கில் தொடக்கம் ஜெயசூரியா, கலுவிதரனா தொடக்கங்களை நினைவூட்டுகிறது. சுருக்கமாகக் கூறினால் இவர்கள் தொடக்கம் அனைத்து ஐபிஎல் அணிகளுக்குமே சிம்ம சொப்பனமாக உள்ளது. இதையெல்லாம் வைத்துத்தான் ஆகாஷ் சோப்ரா இப்படிக் கூறுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: