தொடர் தோல்விகளிலிருந்து மீளுமா? சென்னைக்கு எதிராக பேட்டிங்கைத் தேர்வு செய்த ஹைதராபாத்

சி.எஸ்.கே, எஸ்.ஆர்.எஃச்

சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்று ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

 • Share this:
  ஐ.பி.எல் தொடரின் 23-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி தொடர் தோல்விகளால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கடந்த தொடரில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத சென்னை அணி இந்தமுறை தன்னுடைய பழைய ஃபாமுக்கு வந்துள்ளது. சென்னை அணி 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

  அதேநேரத்தில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நெருங்கடியில் ஹைதராபாத் அணி களமிறங்குகிறது. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

  ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக வார்னரும், அதிரடி பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ்வும் களமிறங்கவுள்ளனர். சென்னை அணியில் மீண்டும் மொயின் அலி இடம்பெற்றுள்ளார். இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: