என்னைக் காப்பாற்றிய ராகுல் திராவிடின் அறிவுரை: புஜாரா நெகிழ்ச்சிப் பகிர்வு

என்னைக் காப்பாற்றிய ராகுல் திராவிடின் அறிவுரை: புஜாரா நெகிழ்ச்சிப் பகிர்வு

வலையில் புஜாரா பயிற்சி.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி, பணமழை ஐபிஎல் டி20 கிரிக்கெட்டுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார் இந்திய டெஸ்ட் தூண் புஜாரா. தன் பேட்டிங்கைக் காப்பாற்றியது ராகுல் திராவிடின் அறிவுரைதான் என்று கூறுகிறார் புஜாரா.

  • Share this:
    ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி, பணமழை ஐபிஎல் டி20 கிரிக்கெட்டுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார் இந்திய டெஸ்ட் தூண் புஜாரா. தன் பேட்டிங்கைக் காப்பாற்றியது ராகுல் திராவிடின் அறிவுரைதான் என்று கூறுகிறார் புஜாரா.

    எப்போதும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்ற ஒரு லேபிள் அவர் மீது பொருத்தப்பட்டு வருகிறது, ஆனால் அவரோ தற்போது வலைப்பயிற்சியில் முன்னங்காலை விலக்கிக் கொண்டு விளாசுவது, ஹை பேக்லிப்ட் பேட்டிங், இறங்கி வந்து தூக்கி அடிப்பது என்று தன் ஷாட் வகையறாவை அதிகரித்துள்ளார்.

    இந்நிலையில் டெஸ்ட் என்ற வடிவத்திலிருந்து டி20 வடிவத்துக்கு மாறிய தனக்கு ராகுல் திராவிட் முன்பு கூறிய அறிவுரை இப்போதும் உதவிகரமாக இருக்கிறது என்று புஜாரா தெரிவித்துள்ளார்.

    ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

    இது அனைத்துமே அனுபவத்தின் மூலம் வருவதுதான். முன்பு டி20 ஆடும்போதெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் நம்மிடமிருந்து போய் விடும், நம் பழைய ஆட்டம் பாதிக்கும் என்று நான் பயப்படுவேன். ஐபிஎல் முடிந்தவுடன் உத்தி ரீதியான தவறுகள் தெரியவரும். ஆனால் இப்போது அந்தச் சந்தேகத்திலிருந்து விடுபட்டுள்ளேன்.

    இப்போது அனுபவத்தின் மூலம், எனது இயல்பான பேட்டிங், என் பலம், என் நின்று நிதானித்து ஆடும் ஆட்டம் என்னை விட்டு போய்விடாது என்பதை உணர்ந்தேன்.

    ராகுல் திராவிட் முன்பொரு முறை சொன்ன அறிவுரை இப்போதும் மேற்கோள் காட்டத்தக்கதுதான். அதை இப்போதும் குறிப்பிட விரும்புகிறேன். அவர் கூறியது என்னவெனில் பலவிதமான ஷாட்களை ஆடுவதால் உன்னுடைய இயல்பான திறமை போய்விடுமென்று நினைக்காதே என்றார்.

    நான் மிகவும் முன்னதாகவே கிரிக்கெட் ஆட ஆரம்பித்து விட்டேன். முதல் தர கிரிக்கெட்டில் 2005-06-ல் அறிமுகமானேன். எனவே ஆடத்தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே டி20 கிரிக்கெட்டில் ஆடுவேன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தயார் செய்வேன், டெஸ்ட் கிரிக்கெட்டை என்னால் மறக்க முடியாது.

    டி20 கிரிக்கெட்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது எனக்கு இனி பிரச்சினை இல்லை.

    இவ்வாறு கூறினார் புஜாரா.
    Published by:Muthukumar
    First published: