Home /News /sports /

IPL 2021 | கொரோனா 2ம் அலை நெருக்கடியிலும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் எப்படி பணத்தை வாரி இறைக்க முடிகிறது?- ஆண்ட்ரூ டை 'பளார்’ கேள்வி

IPL 2021 | கொரோனா 2ம் அலை நெருக்கடியிலும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் எப்படி பணத்தை வாரி இறைக்க முடிகிறது?- ஆண்ட்ரூ டை 'பளார்’ கேள்வி

ராஜஸ்தான் ராயல்ஸின் ஆஸி. வீரர் ஆண்ட்ரூ டை.

ராஜஸ்தான் ராயல்ஸின் ஆஸி. வீரர் ஆண்ட்ரூ டை.

நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது, கடும் நெருக்கடியிலும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் எப்படி இவ்வளவு பணம் செலவழிக்க முடிகிறது? என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ டை கேள்வி எழுப்பியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் 2021-ல் ஒரு போட்டியில் மட்டும்தான் ஆடினார் ஆண்ட்ரூ டை, பிறகு கோவிட் 19 நெருக்கடியினால் விலகி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார்.

    நாட்டில் என்ன நடந்தாலும் சரி, எத்தனை பேர் செத்தாலும் ஐபிஎல் தொடரை நடத்தாவிட்டால் உலகம் இருண்டு விடும் என்பது போல் பயோபப்புள் என்றெல்லாம் ஹை ரிஸ்க் எடுத்து ஐபிஎல் தொடரை இப்போது நடத்தாவிட்டால் என்ன? என்று பலதரப்பிலிருந்தும் கேள்விகள் பிறந்தும் பிசிசிஐ தரப்பில் பணமழை ஐபிஎல் குறித்து எந்த வித நல்ல முடிவையும் எடுக்கத் தயாராக இல்லை.

    கிரிக்கெட் டாட் காம் ஆஸ்திரேலியா ஊடகத்துக்கு ஆண்ட்ரூ டை அளித்த பேட்டியில், “இந்தியப் பார்வையிலிருந்து நோக்கும் போது எப்படி இந்த நிறுவனங்கள், ஐபிஎல் அனி உரிமையாளர்கள் எப்படி பணத்தை வாரி இறைக்க முடிகிறது, இந்திய அரசும் சரி, ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு இவ்வளவு பணம் வாரி இறைக்கப்படுவதை எப்படி அனுமதிக்கிறது? அங்கு மக்கள் மருத்துவமனையில் இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.

    ஆனாலும் கவலை தோய்ந்த இந்திய மக்களுக்கு கிரிக்கெட், ஐபிஎல் கிரிக்கெட் ஆசுவாசம் தரும் என்றால் பிரச்னையில்லை, நடத்தலாம். குகையின் முனையில் சிறு ஒளி தெரிந்தால் கூட நடத்த வேண்டியதுதான், மறுக்கவில்லை. ஆனால் இது அனைவரது கருத்தாகவும் இல்லை, நான் ஒவ்வொருவருடைய கருத்தையும், கோணத்தையும் மதிக்கிறேன்.

    தொடரிலிருந்து விலக எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன. பெர்த்தில் நிறைய பேர் ஹோட்டல்களில் குவாரண்டைனில் இருக்கின்றனர், பெரும்பாலானோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள், இதனால் மேற்கு ஆஸ்திரேலியாவில் சமூகப் பரவல் அச்சமேற்பட்டு கட்டுப்பாடுகள் வரும் சூழல் இருந்தது, இதுதான் நானும் ஊருக்கு வந்து விடக் காரணம்” என்றார் ஆண்ட்ரூ டை.

    ஆஸ்திரேலிய வீரர்கள் ஆண்ட்ரூ டை, ஆடம் ஜாம்ப்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோருடன் லியாம் லிவிங்ஸ்டன், இந்திய வீரர் அஸ்வின் ஆகியோரும் ஐபிஎல் 2021 தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் ஆடி 2-ல் வென்று, 3ல் தோற்று 4 புள்ளிகளுடன் அட்டவணையில் 7ம் இடத்தில் இருக்கிறது.

    அடுத்ததாக டெல்லியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வரும் 29ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, IPL 2021, Rajasthan Royals

    அடுத்த செய்தி