2-வது பந்தில் டக் அவுட்.. தோனி கட்டாயம் இதை செய்தாக வேண்டும்- சுனில் கவாஸ்கர் அட்வைஸ்

தோனி

ஆவேஸ் கான் பந்துவீச்சில் 2-வது பந்திலே தோனி க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

 • Share this:
  சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. சின்ன தல ரெய்னாவின் கம்பேக், தோனியின் பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

  திரும்ப வந்துட்டேன்னு சொல்லு அப்படிங்கிற மாதிரி அதிரடியில் மிரட்டினார் ரெய்னா. அரைசதம் கடந்த ரெய்னா ரன்அவுட்டில் சிக்கி வெளியேறினார். பிராக்டிஸ் செஷன்களில் தோனி சிக்ஸர்களை விளாசும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. அதுமட்டுமின்றி மற்ற வீரர்களுக்கு முன்பாகவே சென்னை வந்த தோனி கடுமையாக பயிற்சி செய்து வந்தார். இதனால் தோனி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

  ஆவேஸ் கான் பந்துவீச்சில் 2-வது பந்திலே தோனி க்ளீன் போல்டாகி வெளியேறினார். இது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. தோனி சீக்கிரம் களமிறங்கி இளம்வீரர்களுக்கு உறுதுணையாக ஆட வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். “ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தோனியும் தனது பேட்டிங் குறித்து சில முடிவுகளை எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். தோனி கடைசி ஆர்டரில் களமிறங்கிறார். கடைசியாக ஒரு 4- 5ஓவர்கள் மட்டும் விளையாடினால் போதும் என தோனி நினைக்கிறாரா.

  தோனி அணியை வழிநடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். இளம்படைகளை கொண்ட அணியை அவர் வைத்திருக்கிறார். அதில் சிலர் மிகவும் இளம்வீரர்கள். சாம் கரன் ஒன்னும் அவ்ளோ அனுபவம் வாய்ந்த வீரர் கிடையாது. சர்வதேச கிரிக்கெட் ஆடுவதால் அவர் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அதனால் அவர் சாம்கரனை 3 அல்லது 4-வது வீரராக களமிறக்கலாம். தோனி முன்பே வந்து ஆடவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அப்போதுதான் அவரால் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும். டெல்லிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது பந்துகளில் அவுட்டாகி வெளியேறினார் . இது எல்லா வீரர்களுக்கு நடப்பதுதான். இந்த தொடரில் அவர் 5 அல்லது6வது வீரராக களமிறங்க வேண்டும்” என கவாஸ்கர் கூறியுள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: