• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ரெய்னாவை உட்கார வைத்து உத்தப்பாவுக்கு ஆதரவு- தோனியை பாராட்டும் கம்பீர்

ரெய்னாவை உட்கார வைத்து உத்தப்பாவுக்கு ஆதரவு- தோனியை பாராட்டும் கம்பீர்

வெற்றி மகிழ்ச்சியில் அன்றைய தல தோனி, பின்னணியில் ராபின் உத்தப்பா.

வெற்றி மகிழ்ச்சியில் அன்றைய தல தோனி, பின்னணியில் ராபின் உத்தப்பா.

சுரேஷ் ரெய்னாவை விடுத்து ராபின் உத்தப்பாவை ஆதரித்து பிளே ஆஃப் சுற்றில் சேர்த்தது குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு கம்பீர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ராபின் உத்தப்பாவின் திறமை பற்றி கவுதம் கம்பீர் அறிவார், ஏனெனில் கொல்கத்தா அணிக்கு கம்பீர் கேப்டன்சியில் ராபின் உத்தப்பா ஆடியிருக்கிறார், அதிரடி காட்டியுள்ளார். விக்கெட் கீப்பிங்கும் செய்துள்ளார் உத்தப்பா. ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகளில் ரெய்னாவின் சாதனைகளை ரசிகர்கள் புட்டுப்புட்டு வைத்து பேசி தோனியிடம் மன்றாடினர் ரெய்னாவை அணியில் சேர்ப்பதற்காக. ஆனால் தோனி, ராபின் உத்தப்பாவுக்கு ஆதரவு அளித்தார்.

    2012, 2014 தொடர்களில் ஐபிஎல் சாம்பியன்களான கொல்கத்தா அணியில் ராபின் உத்தப்பா இருந்தார். கவுதம் கம்பீர்தான் அப்போது கேப்டன். கம்பீருடன் உத்தப்பா ஓபனிங் இறங்கி கலக்கியுள்ளார், இதனையடுத்து உத்தப்பாவுக்காகப் பேசியுள்ளார் கவுதம் கம்பீர்.

    “ராபின் உத்தப்பாவை தொடர்ந்து அணியில் வைத்திருந்ததற்காக தோனியைப் பாராட்ட வேண்டும். ரெய்னாவை அணியில் எடுக்கவேண்டும் என தோனி சுலபமாக சபலம் காட்டியிருப்பார். ஆனால் ஒரு வீரருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் அவரால் பயன்களைப் பெற முடியும் என்பதை ராபின் உத்தப்பா நிரூபித்து தோனியின் தெரிவை நிலைநாட்டியுள்ளார்.

    திறமை இருந்தால் வாய்ப்பளிக்கும் அவர்கள் நன்றாக வருவார்கள், ராபின் உத்தப்பாவிடம் திறமை இருக்கிறது, அதுவும் உத்தப்பாவை நம்பர் 3-யில் இறக்கியது மிகப்பெரிய மூவ். 3ம் நிலையில் இறங்குவது உத்தப்பாவுக்குப் பிடிக்கும் தோனி இதனை சரியாக அங்கீகரித்துள்ளார்” என்றார் கவுதம் கம்பீர்.

    நாம் கூற வருவதென்னவெனில், ராபின் உத்தப்பா நேற்று 44 பந்துகளில் 63 ரன்கள் விளாசி, ருதுராஜ் கெய்க்வாடுடன் சதக்கூட்டணி அமைக்கவில்லை எனில் சிஎஸ்கே பல்லிளித்திருக்கும், ஆனால் சிஎஸ்கே ரசிகமணிகளுக்கு யார் அடித்தாலும் பெரிதாகப் பேச மாட்டார்கள் தோனி அடித்தால் மட்டும்தான் அவர்களுக்கு பிடிக்கும் அவர்களைப் பொறுத்தவரை தோனிதான் சிஎஸ்கே, சிஎஸ்கேதான் தோனி. தோனிதான் ராஜா மற்றவர்களெல்லாம் பான்கள், ஆனால் செஸ் ஆட்டத்தில் பான்களின் பாதுகாப்பில்லாமல் பான்களின் முன்வரிசை தடுப்பு, அட்டாக் இல்லாமல் ராஜாவே டம்மிதான் என்பதுதான்உண்மை.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: