வருணை நிறுத்தியது ஏன்?.. இப்படி ஒரு மோசமான கேப்டன்ஸியை பார்த்ததில்லை- மோர்கனை சாடும் கவுதம் கம்பீர்

மோர்கன், கம்பீர்

கோலி, பண்டிதார் விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்திக்கு 4-வது ஓவரை கொடுக்காதது விமர்சனத்திற்குள்ளாகியது.

  • Share this:
    சென்னை ஆடுகளம் என்னை செயலற்று நிற்க செய்துவிட்டது. எங்களால் போதிய விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை என கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன் வேதனை தெரிவித்துள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மோர்கனின் எடுத்த முடிவுகளே அவருக்கு பாதகமாக முடிந்துவிட்டது என்கின்றனர் கிரிக்கெட் வல்லுனர்கள். நேற்றைய போட்டியில் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் அதிரடியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 204 ரன்களை குவித்தது.

    இந்த ரன்களை சேஸ் செய்த கொல்கத்தா கொல்கத்தா அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 19-வது ஓவரை வீசிய  முகமது சிராஜ் அவுட் சைட் யார்க்கராக வீசி ரஸலை கட்டுப்படுத்தினார். இந்த ஓவரில் கொல்கத்தா அணியால் ஒரு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.  38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. போட்டிக்கு பின்னர் பேசிய பெங்களூரு கேப்டன் விராட் கோலி இந்த ஸ்லோ பிட்சில் நாங்கள் கூடுதலாக 40 ரன்களை எடுத்ததாகவே உணர்கிறேன் என்றார். மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸின் அதிரடியால்தான் எங்களால் இந்த ரன்களை எடுக்க முடிந்தது என கோலி ஓப்பனாகவே கூறினார்.

    பவர் ப்ளே ஓவர்களில் சறுக்கிய ஆர்.சி.பி அணியை மேக்ஸ்வெல் தான் மீட்டுக்கொடுத்தார். பவர் ப்ளேவில் ஸ்பின்னர்களை கொண்டு வந்து ஆர்.சி.பிக்கு நெருக்கடி கொடுத்த இயான் மோர்கன். 2-வது ஓவரில் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து கோலி, பண்டிதார் விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்திக்கு 4-வது ஓவரை கொடுக்காதது விமர்சனத்திற்குள்ளாகியது. இப்படி ஒரு மோசமான கேப்டன்ஸியை நான் பார்த்ததே இல்லை என கொல்கத்தாவுக்கு ஐபிஎல் கோப்பையை பெற்றுத்தந்த கம்பீர் சாடியுள்ளார்.

    “விராட் கோலி ஒரு பெரிய விக்கெட் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இப்படி ஒரு மோசமான கேப்டன்ஸியை நான் பார்த்ததே இல்லை. வருண் சக்கரவர்த்தி தனது முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளார். விராட் கோலி, பண்டிதார் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளர். ஆனால் அவருக்கு உடனடியாக அடுத்ததாக ஓவர்களை வழங்கவில்லை. முதல் 6 ஓவர்களிலே மேட்சை கட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். வருண் சக்கரவர்த்தி மூன்றாவது இன்னொரு விக்கெட்டை கூட எடுத்துக்கொடுத்து இருப்பார்.

    மேக்ஸ்வெல் 6 ஓவர்களுக்குள் அவுட்டாகி இருந்தால் மேட்ச் அங்கேயே முடிந்திருக்கும். டிவில்லியர்ஸ் பின்னால் இருக்கிறார். ஆனால் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்கும். நல்ல வேளை ஒரு இந்தியக் கேப்டன் இதுபோன்ற தவறை செய்யவில்லை. இதுவே ஒரு இந்திய வீரர் இப்படியான கேப்டன்சியை செய்திருந்தால் வரிந்துக்கட்டிக்கொண்டு வந்திருப்பார்கள் விமர்சனம் செய்தவதற்கு. மோர்கனின் தவறான முடிவால் தான் அவர்கள் பெரிய ஸ்கோர்களுக்கு சென்றனர். இப்படி ஒரு மோசமான கேப்டன்ஸியை நான் பார்த்ததே இல்லை. என்னால் இதை விளக்கி கூற முடியவில்லை.” என தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.
    Published by:Ramprasath H
    First published: