Home /News /sports /

Prithvi Shaw | IPL 2021: பிரிதிவி ஷா மாதிரி ஆடணும், இல்லையா டீமை விட்டு தூக்க வேண்டியதுதான்: ஷுப்மன் கில்லுக்கு மெக்கல்லம் மறைமுக எச்சரிக்கை

Prithvi Shaw | IPL 2021: பிரிதிவி ஷா மாதிரி ஆடணும், இல்லையா டீமை விட்டு தூக்க வேண்டியதுதான்: ஷுப்மன் கில்லுக்கு மெக்கல்லம் மறைமுக எச்சரிக்கை

ஷுப்மன் கில்.

ஷுப்மன் கில்.

பிரிதிவி ஷா மாதிரி ஆடினால் அணியில் நீடிக்கலாம் இல்லை எனில் அணியிலிருந்து தூக்கி விட்டு வேறு வீரரைத்தான் களமிறக்க வேண்டும் என்று ஷுப்மன் கில், நிதிஷ் ராணா உள்ளிட்டோருக்கு கொல்கத்தா கோச் மெக்கல்லம் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  ஐபிஎல் 2021-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஆட்டம் நாளுக்கு நாள் சொதப்பி வருகிறது, நேற்றும் மோசமாக ஆடி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் சரண்டர் ஆகி படுதோல்வி தழுவியது.

  அன்று பஞ்சாப் கிங்ஸ் 123 ரன்களுக்கு மடிய தொடர்ந்து அடிய கொல்கத்தா 126 ரன்களை போராடி எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியும் யார் தோற்பது என்று கேட்டுக் கேட்டு ஆடியது போன்ற தரமற்ற கிரிக்கெட்டை வெளிப்ப்டுத்தியது.

  இந்நிலையில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 25வது ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 154 ரன்களுக்கு மட்டுப்படுத்திய டெல்லி கேப்பிடல்ஸ் பிறகு 16.3 ஒவர்களில் 156/3 என்று இலக்கை விரட்டி அபார வெற்றியை ஈட்டியது. பிரிதிவி ஷா 41 பந்துகளில் 82 ரன்கள் விளாசி கொல்கத்தாவை புதைத்தார். முதல் ஓவரை வீசிய ஷிவம் மாவியை 6 பவுண்டரிகள் விளாசி அவரை நிலைகுலையச் செய்தார்.

  பாட் கமின்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலரை ஆட்டம் கையை விட்டு போன பிறகு 6வது ஓவரில் கொண்டு வருகிறார் உலகக்கோப்பை வென்ற இயான் மோர்கன். இது என்ன கேப்டன்சி என்று பலரும் அதிர்ச்சியடைந்தனர், பாட் கமின்ஸே விட்டேத்தியாகவே இருந்தார், ஆனால் கடைசியில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழக்க இவரே காரணமாக அமைந்தார்.

  இந்நிலையில் கொல்கத்தாவின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் கடும் வெறுப்படைந்து அணியையே மாற்றத் தயங்க மாட்டேன் என்று எச்சரித்துள்ளார்.

  பிரிதிவி ஷா வெளுத்துக் கட்ட, அவருக்குப் பறிபோன டெஸ்ட் இடத்தில் ஆடி பிரமாதமாக ஆஸ்திரேலியாவில் செயல்பட்ட கொல்கத்தாவின் ஷுப்மன் கில் மாறாக 7 ஆட்டத்தில் 132 ரன்களை 19 க்கும் கீழான சராசரியில் ஸ்ட்ரைக் ரேட் 120 என்று ரன்கள் எடுத்திருப்பது பலருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது.

  இந்நிலையில் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் கூறியதாவது:

  இது மிக மிக ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு வீரராக ஆடுவதற்குச் சுதந்திரம் கேட்கிறீர்கள், அணியில் தேர்வு செய்ய நம்பிக்கை வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ஆனால் அங்கு சென்று ஆக்ரோஷமாக ஆட மாட்டேன் என்கிறீர்கள், உங்கள் அணிக்காக விஷயங்களை அங்கு களத்தில் சாதிக்க வேண்டும்.

  இத்தகைய ஒரு ஆட்டத்தைத்தான் நானும் கேட்கிறேன், கேப்டன் மோர்கனும் வீரர்களிடம் எதிர்பார்க்கிறார். துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு அத்தகைய தீவிர ஆட்டம் கிடைக்கவில்லை. ஆக்ரோஷம் நிறைய தேவைப்படுகிறது

  பிரிதிவி ஷா எப்படி ஆடினார், அப்படித்தான் நாங்களும் ஆடவேண்டும் என்று கருதுகிறேன். ஒவ்வொரு பந்தையும் சிக்ஸ், பவுண்டரிக்கு அடிக்க முடியாது, ஆனால் அப்படி அடிப்பதற்கான தீவிரம் வேண்டும். அதுவும் உங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கும் போது அப்படி ஆட வேண்டும். கொல்கத்தா வீரர்கள் போதிய ஷாட்களை ஆடவில்லை. இது வழக்காமாகவே மாறிவிட்டது.

  என் கிரிக்கெட் வாழ்க்கை முழுதும் ஒரு வசனம் கூறப்படுவதுண்டு ஒரு வீரரின் பழக்கத்தை மாற்ற முடியவில்லையா, வீரரையே மாற்று என்பதுதான். எனவே புதிதாக வீரர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

  மந்தமான பிட்ச்களில் புதிய பந்தை ரன்கள் எடுக்க பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பழைய ஆட்டத்தை மறந்து விட்டு பவுண்டரி தேவை அதை நாம் அடித்துத்தான் ஆக வேண்டும் என்று ஆட வேண்டும். ஒரு பவுண்டரி அடித்தோமா அடுத்தடுத்து பவுண்டரிக்கு பார்க்க வேண்டும். இதைச் செய்து விட்டால் எதிரணி பவுலர் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்படுவார்.

  நான் எப்போதும் ஆக்ரோஷமாக ஆடுங்கள், கவலைப்படாதீர்கள் என்றுதான் கூறுகிறேன் அப்படியும் ஆடவில்லை எனில் மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. எனவே நிச்சயம் அணியில் மாற்றங்கள் உண்டு.

  என்றார் மெக்கல்லம்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: IPL 2021, Shubman Gill

  அடுத்த செய்தி