HOME»NEWS»SPORTS»ipl ipl 2021 full list of players released retained ahead of auction mut

ஐபிஎல் 2021: அணிகள் தக்கவைத்த வீரர்கள், விடுவித்த வீரர்கள் பட்டியல், கையிருப்புத் தொகை: முழு விவரம்

ஐபிஎல் 2021 தொடருக்கான மினி ஏலம் பிப்ரவரி 10ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. இதனையடுத்து அனைத்து அணி களும் தங்கள் அணியில் நீடிக்கும் வீரர்கள், கல்தா கொடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2021: அணிகள் தக்கவைத்த வீரர்கள், விடுவித்த வீரர்கள் பட்டியல், கையிருப்புத் தொகை: முழு விவரம்
ஐபிஎல் கோப்பை
  • Share this:

ஐபிஎல் 2021 தொடருக்கான மினி ஏலம் பிப்ரவரி 10ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. இதனையடுத்து அனைத்து அணி களும் தங்கள் அணியில் நீடிக்கும் வீரர்கள், கல்தா கொடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்:

தக்கவைத்த வீரர்கள்: ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், டி காக், அன்மோல் பிரீத் சிங், ஆதித்ய தாரே, கிறிஸ் லின், சவுரவ் திவாரி, ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, பொலார்ட், ஜெயந்த் யாதவ், ட்ரெண்ட் போல்ட், பும்ரா, மோசின் கான், ராகுல் சாஹர், அங்குல் ராய்.



விடுவிப்பு வீரர்கள்: மிட்செல் மெக்லினாகன், ஜேம்ஸ் பேட்டின்சன், லஷித் மலிங்கா, நேதன் கூல்ட்டர் நைல், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு, திக்விஜய் தேஷ்முக், பிரின்ஸ் பலவந்த் ராய் சிங்.

கையிருப்புத் தொகை: ரூ15.35 கோடி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: தினேஷ் கார்த்திக், ஆந்த்ரே ரஸல், கம்லேஷ் நாகர்கோட்டி, குல்தீப் யாதவ், லாக்கி பெர்கூசன், நிதிஷ் ராணா, பிரசித் கிருஷ்ணா, ரிங்கு சிங், சந்தீப் வாரியர், சிவம் மாவி, ஷுப்மன் கில், சுனில் நரைன், மோர்கன், பாட் கமின்ஸ், ராகுல் திரிபாதி, வருண் சக்ரவர்த்தி, ஹாரி குர்னி, அலி கான்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: எம்.சித்தார்த், நிகில் நாயக், சித்தேஷ் லாத், கிறிஸ் கிரீன், டாம் பேன்ட்டன்.

கையிருப்புத் தொகை: ரூ.10.85 கோடி.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு:

தக்கவைப்பு வீரர்கள்: விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ், சாஹல், தேவ்தத் படிக்கால், பிலிப், சிராஜ், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, ஷாபாஸ் அகமது, பவன் தேஷ்பாண்டே, ஆடம் ஸாம்ப்பா, கேன் ரிச்சர்ட்சன்.

விடுவிப்பு வீரர்கள்: கிறிஸ் மோரிஸ், ஏரோன் பிஞ்ச், மொயின் அலி, இசுரு உதனா, ஷிவம் துபே, உமேஷ் யாதவ், பவன் நெகி, குர்கீரத் மான், பார்த்திவ் படேல், டேல் ஸ்டெய்ன்.

கையிருப்புத் தொகை: ரூ.35.7 கோடி.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:

தக்கவைத்த வீரர்கள்: டேவிட் வார்னர், அபிஷேக் சர்மா, பேசில் தம்பி, புவனேஷ்வர் குமார், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், மணீஷ் பாண்டே, முகமது நபி, ரஷீத் கான், சந்தீப் சர்மா, ஷாபாஸ் நதீம், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, சித்தார்த் கவுல், கலீல் அகமெட், டி.நடராஜன், விஜய் சங்கர், சஹா, அப்துல் சமது, மிட்செல் மார்ஷ், ஹோல்டர், பிரியம் கார்க், விராட் சிங்.

விடுவிக்கப்பட்டவர்கள்: சஞ்சய் யாதவ், சந்தீப் பாவங்கா, பில்லி ஸ்டான்லேக், ஃபேபியன் ஆலன், யரா பிரிதிவிராஜ்.

கையிருப்பு தொகை: ரூ.10.75 கோடி.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

தக்கவைத்த வீரர்கள்: ராகுல், கெய்ல், மயங்க் அகர்வால், பூரன், மந்தீப் சிங், சர்பராஸ் கான், தீபக் ஹூடா, பிரப்சிம்ரன் சிங், ஷமி, கிறிஸ் ஜோர்டான், தர்ஷன் நல்கண்டே, ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின், அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பிரார், இஷான் போரெல்.

கல்தா வீரர்கள்: கிளென் மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரெல், கே.கவுதம், முஜீப் உர் ரஹ்மான், ஜிம்மி நீஷம், ஹார்தஸ் விலோயென், கருண் நாயர்.

கையிருப்புத் தொகை: ரூ.53.2 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் தக்க வைத்த வீரர்கள்: சஞ்சு சாம்சன், மஹிபால் லோம்ரோர், மனன் வோரா, ரியான் பராக், ராபின் உத்தப்பா, டேவிட் மில்லர், மயங்க் மார்க்கண்டே, ஆர்ச்சர், ஸ்ரேயாச் கோபால், உனாட்கட், கார்த்தி தியாகி, டை, ஸ்டோக்ஸ், ராகுல் திவேத்தியா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், அனுஜ் ராவத்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஸ்டீவ் ஸ்மித், வருண் ஆரோன், டாம் கரன், அங்கிட் ராஜ்புத், அனிருத்தா ஜோஷி, ஷஷாங்க் சிங், ஒஷேன் தாமஸ், ஆகாஷ் சிங்.

கையிருப்புத் தொகை: ரூ.34.85 கோடி.

டெல்லி கேப்பிடல்ஸ் தக்கவைத்த வீரர்கள்: ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பந்த், ஷிகர் தவண், பிரிதிவி ஷா, ஆர்.அஸ்வின், இஷாந்த் சர்மா, அஜிங்கிய ரஹானே, அக்சர் படேல், அமித் மிஸ்ரா, ஆவேஷ் கான், மார்கஸ் ஸ்டாய்னிஸ், சிம்ரன் ஹெட்மையர், கேகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்டியே, பிரவிண் துபே, லலித் யாதவ். கிறிஸ் வோக்ஸ்.

விடுவிப்பு வீரர்கள்: கீமோ பால், சந்தீப் லாமிஷேன், அலெக்ஸ் கேரி, மோஹித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, ஜேசன் ராய்.

கையிருப்புத் தொகை: ரூ.12.8 கோடி.

சிஎஸ்கே தக்கவைத்த வீரர்கள்: தோனி, ஜடேஜா, ரெய்னா, ஃபாப் டு பிளெசிஸ், சாம் கரன், டிவைன் பிராவோ, ஹாசில்வுட், லுங்கி இங்கிடி, ராயுடு, கரண் சர்மா, மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்கூர், ருதுராஜ் கெய்க்வாட், என்.ஜெகதீசன், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், கே.எம்.ஆசிப், ஆர்.சாய் கிஷோர்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: சாவ்லா, கேதார் ஜாதவ், முரளி விஜய், ஹர்பஜன் சிங், மோனு குமார் சிங், ஷேன் வாட்சன் (ரிட்டையர்டு)

கையிருப்புத் தொகை ரூ.22.9 கோடி.
Published by:Muthukumar
First published: