IPL 2021: SRH vs RR | கேப்டன் பதவியிலிருந்து நேராக டிரிங்க்ஸ் சுமப்பவர்: டேவிட் வார்னரின் பரிதாப நிலை

IPL 2021: SRH vs RR | கேப்டன் பதவியிலிருந்து நேராக டிரிங்க்ஸ் சுமப்பவர்: டேவிட் வார்னரின் பரிதாப நிலை

நடுவில் வார்னர்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் 2021-ல் தங்கள் வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள பலிகடாவைத் தேடினர், வார்னர் கிடைத்தார், அவரை கேப்டன்சியிலிருந்து தூக்கி விட்டு கேன் வில்லியம்சனை கேப்டனாக நியமித்தனர்.

  • Share this:
    வார்னர் கேப்டன்சியில் 6 போட்டிகளில் 5-ல் தோற்றது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். வார்னர் பேட்டிங்கும் சொதப்பலாக அமைந்தது, அவரே அதிக பந்துகளை சாப்பிட்டு குறைவாக ரன்களை எடுத்து வருகிறார், அன்று 55 பந்துகள் ஆடி 57 ரன்கள்தான் எடுத்தார். அவர் அடித்த ஷாட்களெல்லாம் பீல்டர் கைகளுக்கு நேராக சென்றது இதை அவரே ஒப்புக் கொண்டார்.

    இதோடு மட்டுமல்லாமல் வார்னரை விளையாடும் லெவனிலிருந்தே நீக்கப்போவதாகவும் அறிவித்து அசிங்கப்படுத்தி விட்டனர்.

    வார்னருக்கும் டாம் மூடிக்கும் உறவு நிலவரம் சரியாக அமையவில்லை என்று சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு போட்டியில் மணீஷ் பாண்டேவை நீக்கி விட்டு விரா சிங் என்பவரை எடுத்ததிலிருந்து சர்ச்சை தொடங்கியதாகத் தெரிகிறது. வார்னரே பாண்டேயை நீக்கியது கடினமான முடிவு என்று ஒப்புக் கொண்டார். பிளேயிங் லெவனை முடிவு செய்வதில் டாம் மூடிக்கும் வார்னருக்கும் ஒத்துப்போவதில்லை என்று கூறப்படுகிறது.

    இவருக்கு பதில் இன்று அப்துல் சமது என்பவரை சன் ரைசர்ஸ் அணியில் தேர்வு செய்துள்ளனர்.

    சரி கேப்டன்சி சரியில்லை நீக்கியாகி விட்டது, பேட்டிங் சரியாக வேண்டுமென்றால் ஒரு பிரேக் கொடுப்பதும் நல்லதுதான், ஆனால் அதற்காக அவரை டிரிங்க்ஸ் சுமக்க வைப்பது, அங்கு பந்துகள் சென்றால் பந்தை எடுத்துப் போடுவது போன்ற பணிகளை அவர் செய்வது பார்க்கவே பரிதாபமாக உள்ளது. இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் களத்திற்கு டிரிங்க்ஸ் சுமந்து வந்தார்.

    களத்திலிருந்து பவுண்டரிக்கு அனுப்பப்பட்ட பந்துகள் வீரர்கள் அமரும் இடத்துக்கு அருகில் சென்றால் வார்னர் பந்தை எடுத்து மீண்டும் களத்துக்கு அனுப்புகிறார். அவரது இந்த நிலை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

    பணமழை ஐபிஎல் என்பதற்காக அவராகவே இத்தகைய பணிகளை செய்ய ஆர்வம் காட்டினாலும் அதை தடுக்க வேண்டும், வீரர்களின் மரியாதை, கவுரவம் முக்கியம் என்பதை ஐபிஎல் அணி நிர்வாகங்கள் உணருமா?
    Published by:Muthukumar
    First published: