Home /News /sports /

RCB vs PBKS: மோசமான அம்பயரிங், மன்னிக்கவே முடியாது: ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்

RCB vs PBKS: மோசமான அம்பயரிங், மன்னிக்கவே முடியாது: ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்

படிக்கல் நாட் அவுட் விவகாரத்தில் நடுவருடன் பேசும் கே.எல்.ராகுல்.

படிக்கல் நாட் அவுட் விவகாரத்தில் நடுவருடன் பேசும் கே.எல்.ராகுல்.

ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தேவ்தத் படிக்கல் ஆடிய ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் சிக்காமல் கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனதை தேர்ட் அம்பயரே மறுக்கலாமா? என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் ஐபிஎல் நடுவாண்மை தரம் குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
 • Cricketnext
 • 2 minute read
 • Last Updated :
  ஆர்சிபி பேட்டிங்கின் 8வது ஓவரில்தான் இந்த தீர்ப்பு விவகாரம் நடந்தது. தேவ்தத் படிக்கல் ரிவர்ஸ் ஷாட் ஆட முயன்று பந்து அவரது கிளவ்வில் பட்டுச் சென்றது, கள நடுவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, எனவே அவர் நாட் அவுட் என்றார், பஞ்சாப் கேப்டன் ராகுல் 3வது நடுவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீநிவாசனிடம் மேல்முறையீடு செய்தார். ஆனால் ரிவியூவில் கிளீன் ஆக எட்ஜ் காட்டியும் நாட் அவுட் என்றாரே பார்க்கலாம், அனைவருக்கும் ஒரு மோசமான ஷாக் ஆகிவிட்டது.

  இந்தச் சம்பவம் ஐபிஎல் போட்டிகளின் நம்பகத்தன்மை மீதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, அதே போல் இடுப்புக்கு மேல் செல்லும் ஒருபந்தைக்கூட நோ-பால் என்று சொல்வதில்லை. கடந்த ஐபிஎல்களில் ஒருமுறை கேன் வில்லியம்சன் தலைமை சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெற்ற போட்டியில் ஏகப்பட்ட நடுவர் மோசடிகள் நடந்து கேன் வில்லியம்சன் அதை வெளிப்படையாகவே விமர்சித்ததும் நடந்தது.

  வணிக நலன்களுக்காக நடத்தப்பட்டாலும் கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக ஆட வேண்டுமே தவிர மோசடி செய்து பார்க்கும் மக்களை ஏமாற்றுவதை எப்படி அனுமதிக்க முடியும்? தமிழ்நாட்டு வீரர் ஒருவர் கூட இல்லாவிட்டாலும் சிஎஸ்கே அணியை சென்னை வாசிகள் தங்கள் அணி போலவே நினைத்து பார்க்கிறார்கள், நேர்மையாக ஜெயிக்க வேண்டும் என்பதை அனைவருமே விரும்புகின்றனர்.

  இந்நிலையில் இப்படி வெளிப்படையாக நாட் அவுட் என்று படிக்கல் அவுட்டுக்கு தீர்ப்பளித்தது கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது, நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ், “அந்த 3வது நடுவரை உடனே நீக்குங்கள், வாட் எ ஜோக்” என்று பதிவிட்டுள்ளார்.

  மற்றொரு வீரர் ஆகாஷ் சோப்ரா, “அது எப்படி நாட் அவுட் ஆகும்?” என்று சாடியுள்ளார். முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், “மோசமான அம்பயரிங், இப்படிப்பட்ட தவறுகளை மன்னிக்கவே முடியாது, இவ்வளவு தொழில்நுட்ப வசதிகள் இருந்தும் உதவிகள் இருந்தும் தவறுகள் நடந்தால் அதை மன்னிக்க முடியாது” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

  Also Read: கோலிக்கு 2 கேட்ச் ட்ராப்; படிக்கல் அவுட் மறுப்பு: கேள்விக்குறியாகும் ஐபிஎல் நம்பகத்தன்மை

  நேற்றைய ஆட்டமே ஒரு உஷ் கண்டுக்காதீங்க ரக ஆட்டம்தான், 91/0-லிருந்து தோற்பது எப்படி என்பதை பஞ்சாப் கொஞ்சம் விவரித்தால் நல்லது. கோலிக்கு 2 கேட்ச்களை விட்டது எப்படி என்பதையும் பஞ்சாப் விவரித்தால் நல்லது.

  ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Captain Virat Kohli, IPL 2021, Kl rahul, RCB

  அடுத்த செய்தி