IPL 2021: யுஏஇ.யில் நடக்கும் சுற்றில் விளையாடாத அயல்நாட்டு வீரர்களுக்கு சம்பளம் கட்?

ஐபிஎல் கோப்பை.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் மீதி ஐபிஎல் போட்டிகளில் ஆடாத அயல்நாட்டு வீரர்களுக்கு முழுச்சம்பளம் கிடைக்காது என்று தெரிகிறது.

  • Share this:
    ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான பயோபபுளை உடைத்துக் கொண்டு கொரோனா வைரஸ் ஊடுருவ தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

    இப்போது மீதிப் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவிருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது, ஆனால் இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய, மே.இ.தீவுகள் வீரர்கள் பங்கேற்பது கடினமாகியுள்ள நிலையில் மீதிப் போட்டிகளில் விளையாடாத அயல்நாட்டு வீரர்களுக்கு முழு சம்பளம் கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது.

    செப்டம்பரில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் 2021-ன் மீதிப் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ஆஷ்லி ஜைல்ஸ் தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வீரர்களும் பங்கேற்பது கடினம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் விளையாட்டு சார்ந்த ஊடகம் ஒன்றுக்கு கூறுகையில், எந்தப் போட்டியில் ஆடுகிறார்களோ அந்தப் போட்டிக்கான தொகை மட்டுமே முழுதும் பங்கேற்காத வெளிநாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    யுஏஇ சுற்றில் ஆடாத வெளிநாட்டு வீரர்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்ய அணி உரிமையாளர்களுக்கு உரிமையுள்ளது. அதாவது ஆடிய போட்டிகளுக்கு மட்டும் ஊதியம் கொடுக்கப்படும், என்றார் அந்த அதிகாரி.

    உதாரணத்துக்கு பாட் கமின்ஸ் 15.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறார் என்றால். அவர் யுஏஇ.யில் ஆட மறுத்து விட்டார் எனில் அவருக்கு ரூ.7.75 கோடிதான் அளிக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஐபிஎல் போட்டித்தொடரின் இடையில் காயமடைந்தால் முழு சம்பளம் கிடைக்கும். பிசிசிஐ முழு சீசன் தொடரையும் நடத்தவில்லை எனும் போதும் வீரர்களுக்கு முழு சம்பளம் கொடுக்க வேண்டும், அதனால்தான் இதை எப்படியாவது நடத்த வேண்டும் என்று கங்குலி துடிக்கிறார் போலும். வீரர்கள் தாமாகவே விலகினால் அவர்களுக்கு ஆடிய போட்டியின் அடிப்படையில் சம்பளம் கொடுக்கப்படும்.

    ஐபிஎல் 2021 தொடரில் இன்னமும் 31 போட்டிகள் மீதமுள்ளன. இரண்டாவது சுற்று செப்டம்பர்-அக்டோபரில் நடக்கலாம். ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Muthukumar
    First published: