IPL 2021 | டெல்லி மைதான ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி.. கலக்கத்தில் வீரர்கள்...

IPL 2021 | டெல்லி மைதான ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி.. கலக்கத்தில் வீரர்கள்...

சென்னை சூப்பர் கிங்ஸ்,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

  • Share this:
இன்று காலையில் இருந்து வரக்கூடிய செய்திகள் அனைத்தும் ஐபிஎல் ரசிகர்கள் கவலை கொள்ளும் விதமாக உள்ளது. டெல்லி அணியில் இரண்டு வீரர்களுக்கும், சென்னை அணியில் வீரர்கள் அல்லாத மூவருக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது டெல்லி கிரிக்கெட் மைதான ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியில் ஐபிஎல் 2021 தொடர் நடைபெற்று வருகிறது. இதனிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் சர்மாவிற்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்ய்ப்பட்டுள்ளது.

இதனால் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன், சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரும், முன்னாள் இந்திய வீரருமான லட்சுமிபதி பாலாஜி மற்றும் சென்னை அணி வீரர்கள் பயணிக்கும் பேருந்தின் கிளீனர் ஒருவர் என மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியின் போது எல்.பாலாஜி சென்னை அணி வீரர்களின் டக் அவுட் பகுதியில் இருந்ததால் சென்னை அணி வீரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் இன்று பயிற்சியையும் ரத்து செய்துவிட்டு பயோ பபுளில் இருந்து வருகின்றனர்.

‘இது வெட்கக்கேடானது’: ஐபிஎல் வீரர்களை சாடிய முன்னாள் சேர்மன் லலித் மோடி..!


இப்படி அடுத்தடுத்து வீரர்கள், நிர்வாகிகள், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடர் நடைபெறும் மைதானங்களில் ஒன்றான டெல்லியில் மைதான ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி பெஃரோஸ் ஷா கோட்லா மைதானத்தில், ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியின் போது அவர்கள் பணியில் இருந்ததால் அவர்களிடம் இருந்து வீரர்களுக்கும், பிற அணி ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. அவ்விரு அணி வீரர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

'உங்கள் கைகளில் ரத்தம்': ஆஸ்திரேலிய பிரதமரை சாடிய கிரிக்கெட் வர்ணணையாளர்!


கொரோனா மத்தியில் வீரர்களுக்கு உரிய பாதுகாப்புடன் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதால் ஐபிஎல் தொடர் முழுமையாக நடைபெறுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

 
Published by:Arun
First published: