முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2021 Final | ஒன்று சொல்கிறேன் மோதல் என்று வந்து விட்டால்..- டாடீஸ் ஆர்மி குறித்து பிராவோ ஜாலி

IPL 2021 Final | ஒன்று சொல்கிறேன் மோதல் என்று வந்து விட்டால்..- டாடீஸ் ஆர்மி குறித்து பிராவோ ஜாலி

IPL 2021

IPL 2021

சிஎஸ்கே அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி 4ம் முறையாக ஐபிஎல் கோப்பையை தட்டிச் சென்றது. அடுத்த முறை மகா ஏலம் நடைபெறவிருப்பதால் டாடீஸ் ஆர்மியிலிருந்து பலர் போய் விடுவார்கள், இதனால் சிஎஸ்கே அணிக்கு சிலரின் பிரியா விடை இந்த கோப்பை வெற்றிப்பெருமிதமாகவும் எதிர்கால மலரும் நினைவாகவும் இருக்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சிஎஸ்கே அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி 4ம் முறையாக ஐபிஎல் கோப்பையை தட்டிச் சென்றது. அடுத்த முறை மகா ஏலம் நடைபெறவிருப்பதால் டாடீஸ் ஆர்மியிலிருந்து பலர் போய் விடுவார்கள், இதனால் சிஎஸ்கே அணிக்கு சிலரின் பிரியா விடை இந்த கோப்பை வெற்றிப்பெருமிதமாகவும் எதிர்கால மலரும் நினைவாகவும் இருக்கும்.

டாடீஸ் ஆர்மி என்று சென்னையை 2 ஆண்டுகளாக சிஎஸ்கே வெற்றியைப் பிடிக்காதவர்கள் அந்த அணியை கேலி செய்து வந்தனர். சிஎஸ்கே அணியில் இருக்கும் வீரர்களில் பலரும் வயதானவர்கள். குறைந்தபட்சம் 35 வயதுக்கு மேலானவர்கள் என்பதால் டேடிஸ் ஆர்மி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று டாடீஸ் ஆர்மியின் இணையில்லா டெத் பவுலர் மிடில் பவுலர், ஸ்லோயர் ஒன் ஸ்பெஷலிஸ்ட் டிவைன் பிராவோ வீசிய 2 டைட் ஓவர்கள் இளைஞர்களான ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யரை என்ன சேதி என்று கேட்க பிரஷரில் அவுட் ஆகினர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொல்கத்தா எழுந்திருக்கவே முடியவில்லை.

இதனையடுத்து அனுபவமே கை கொடுக்கும் என்று டிவைன் பிராவோ கூறும்போது, “கடந்த சீசன் எங்களுக்கு மிகவும் வேதனை தரக்கூடியதாக இருந்தது. அணி நிர்வாகத்தினரும் கவலைப்பட்டனர். ரசிகர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதால் இந்த சீசனில் சிறந்த பங்களிப்பை அளித்தோம்.

இறுதிப் போட்டிக்கு வந்தபின் நாங்கள் பதற்றப்படவில்லை. போட்டித் தொடரின் பல்வேறு கட்டங்களில் சிறப்பாகவே விளையாடி இருக்கிறோம். எங்களுக்கு டூப்பிளசிஸ், கெய்க்வாட் இருவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இருவரும் இணைந்து 500 ரன்களுக்கு மேல் சேர்த்தனர்.

ஒன்று சொல்கிறேன். மோதல் என்று வந்துவிட்டால், இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும். என்னுடைய பெயரை மிஸ்டர் சாம்பியன் என்பதற்கு பதிலாக சாம்பியன் சார் என்று மாற்றப் போகிறேன்'' என்றார் பிராவோ.

First published:

Tags: CSK, Dwayne Bravo, IPL 2021