• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐபிஎல் 2021 விருதுகள்: ருதுராஜ் அசத்தல்- ஹர்ஷல் படேலுக்கு 3 விருது- கோலி, ராகுலுக்கு எதுவும் இல்லையா?

ஐபிஎல் 2021 விருதுகள்: ருதுராஜ் அசத்தல்- ஹர்ஷல் படேலுக்கு 3 விருது- கோலி, ராகுலுக்கு எதுவும் இல்லையா?

ஹர்ஷல் படேலுக்கு ஹாட்ரிக் விருதுகள்

ஹர்ஷல் படேலுக்கு ஹாட்ரிக் விருதுகள்

அதிக ரன்கள் பட்டியலில் கே.எல்.ராகுல் 626 ரன்களுடன் 3ம் இடத்தில் இருக்கிறார். விராட் கோலி 15 போட்டிகளில் 405 ரன்கள் என்று தேவ் தத் படிக்கல், ரிஷப் பந்த்திற்கும் கீழே சென்று 12ம் இடத்தில் இருக்கிறார். டுபிளெசிசுக்கு சிறந்த வெளிநாட்டு பேட்ஸ்மென் என்று ஏதாவது கொடுத்திருக்கலாம், கேம் சேஞ்சர் விருதை ராகுலுக்குக் கொடுத்திருக்கலாம்.

  • Share this:
    ஐபிஎல் 2021 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாம்பியன் ஆனதோடு வெற்றிகரமாக நிறைவடைந்தது, நிறைய சவால்களுக்குப் பிறகு இந்தத் தொடர் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது பிசிசிஐயின் நிர்வாக திறமையை எடுத்துக் காட்டுகிறது. கொரோனா பாதிப்பில் தொடங்கி இடைவெளி விட்டு மீண்டும் தொடரை வெற்றிகரமாக முடித்து அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது பிசிசிஐ.

    சிஎஸ்கே கேப்டன் தோனி கோப்பையை 4வது முறையாக வென்று அவரது ரசிகர்கள், ஆக்ரோஷ சென்னை ரசிகர்கள் ஆகியோரை திருப்தி செய்ததோடு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார். கொல்கத்தா அணி ஆக்ரோஷமான கிரிக்கேட்டை ஆடி இந்தத் தொடருக்கு புதிய வண்ணம் சேர்த்தது. வெங்கடேஷ் அய்யர் என்ற ஒரு வீரரை இந்திய அணிக்கு கொடுத்ததில் பிரெண்டன் மெக்கல்லம், மோர்கன் மற்றும் கொல்கத்தா உரிமையாளர், உதவிப்பணியாளர்கள் ஆகியோருக்கு இந்திய ரசிகர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

    ஐபிஎல் 2011 விருது வென்ற வீரர்கள், அணிகள் விவரம்:

    ஐபிஎல் 2021: சாம்பியன் சிஎஸ்கே.

    ஐபிஎல் ரன்னர்கள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    ஐபிஎல் 2021 பைனல்- ஆட்ட நாயகன் ஃபாப் டு பிளெசிஸ் 59 பந்துகளில் 86 ரன்கள். சிஎஸ்கே சாம்பியன் வெற்றியில் பங்களிப்பு அதிகம் செய்தவர்.

    ஐபிஎல் 2021 தொடரின் அதிக மதிப்பு மிக்க வீரர்: ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஹர்ஷல் படேல்

    ஐபிஎல் 2021 அதிக ரன்கள் ஆரஞ்சு தொப்பி: ருதுராஜ் கெய்வாட் 635 ரன்கள் 4 அரைசதங்கள் ஒரு அபார சதம், ஆனால் சதம் அடித்த அந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ச் 190 ரன்கள் இலக்கை விரட்டியது வேறு விஷயம்.

    பர்ப்பிள் கேப், அதிக விக்கெட்டுகள்; ஆர்சிபியின் அபார டெத் பவுலிங் வீரர் - ஹர்ஷல் படேல். 32 விக்கெட்டுகள்.

    கேம் சேஞ்சர் ஆஃப் த சீசன் விருது: மீண்டும் ஹர்ஷல் படேலுக்கே செல்கிறது.

    ஐபிஎல் 2021 பெஸ்ட் கேட்ச்: ரவி பிஷ்னாய். இவர் விருது நிகழ்ச்சியில் இல்லை என்பதால் தீபக் சாகர் அவருக்காக விருதை வாங்கிக் கொண்டார்.

    நியாயமாக ஆடிய ஃபேர் ப்ளே அவார்டு: ராஜஸ்தான் ராயல்ஸ்.

    சீசனின் வளர்ந்து வரும் வீரர் விருது: மீண்டும் ருதுராஜ் கெய்க்வாட்.

    அதிக ரன்கள் பட்டியலில் கே.எல்.ராகுல் 626 ரன்களுடன் 3ம் இடத்தில் இருக்கிறார். விராட் கோலி 15 போட்டிகளில் 405 ரன்கள் என்று தேவ் தத் படிக்கல், ரிஷப் பந்த்திற்கும் கீழே சென்று 12ம் இடத்தில் இருக்கிறார். டுபிளெசிசுக்கு சிறந்த வெளிநாட்டு பேட்ஸ்மென் என்று ஏதாவது கொடுத்திருக்கலாம், கேம் சேஞ்சர் விருதை ராகுலுக்குக் கொடுத்திருக்கலாம்.

    உண்மையில் வளர்ந்து வரும் வீரர் என்றால் வெங்கடேஷ் அய்யர்தான், அவரை ஊக்குவிக்கும் விதமாக ஏதாவது விருது கொடுத்திருக்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: