• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021| சிஎஸ்கே ஜெர்சியில் காட்சியளித்த டேவிட் வார்னர்: சூசக விருப்பம்?

IPL 2021| சிஎஸ்கே ஜெர்சியில் காட்சியளித்த டேவிட் வார்னர்: சூசக விருப்பம்?

சிஎஸ்கே ஜெர்சியில் வார்னர்.

சிஎஸ்கே ஜெர்சியில் வார்னர்.

சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் சரியான முறையில் நடத்தாமல் கேப்டன்சி மற்றும் அணியிலிருந்தே தூக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஐபிஎல் 2021 இறுதிப் போட்டிக்கு முன்னர் சிஎஸ்கே ஜெர்சியில் காட்சியளித்த போட்டோ இன்ஸ்டாகிராமில் வைரலானது. இவர் மட்டுமல்ல இவரது மகளுடன் போஸ் கொடுத்தார் டேவிட் வார்னர்.

  • Share this:
    துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கே தனது ஆதரவு என்பதைக் குறிக்கவோ அல்லது அடுத்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணியின் கடாட்சம் தனக்கு வேண்டும் என்பதாகவோ இவரது இந்தச் செய்கை நெட்டிசன்களால் பார்க்கப்படுகிறது.

    வரும் மெகா ஏலத்தில் வார்னர் சன் ரைசர்ஸ் அணியினால் தக்க வைக்கப்பட மாட்டார் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 2 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். வார்னரும் புதிதாக வரும் இரண்டு அணிகளில் ஏதாவது ஒன்றை கேப்டனகா வழிநடத்துவார் என்று ஹேஷ்யங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

    சிஎஸ்கே ஜெர்சியில் வார்னர்


    ஆனால் அவரோ, “சன் ரைசர்ஸ் அணிக்கே தொடர விரும்புகிறேன் ,ஆனால் அது உரிமையாளர்கள் கையில்தான் உள்ளது” என்று கூறினார் வார்னர். ட்ரிவர் பெய்லிஸ், லஷ்மன், மூடி, முரளிதரன் அனைவரும் சேர்ந்துதான் முடிவெடுத்தனர், ஆனால் இதில் யார் எனக்கு ஆதரவும் யார் எதிர்ப்பு என்று எனக்குத் தெரியவில்லை.

    குறிப்பாக 100 போட்டிகள் பக்கம் சன் ரைசர்ஸ் அணிக்காக ஆடி விட்டேன். ஐபிஎல் 2021-ல் 4 போட்டிகள் மோசமாக அமைந்தது சென்னையில். கேப்டன்சியை இழந்தது விழுங்குவதற்குக் கடினமான விஷயம். இன்னும் எனக்குக் கேள்விகள் நிறைய இருக்கின்றன, ஆனால் இதற்கெல்லாம் விடைகள் கிடைக்காது என்பதையும் அறிவேன், ஆனால் நாம் இதைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறி செல்ல வேண்டியதுதான்” என்று வார்னர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

    Also Read: IPL 2021 Final CSK vs KKR | வயதானவர்கள் என்று கேலி செய்தனர், இப்ப என்ன ஆச்சு?- ஸ்டீபன் பிளெமிங் பெருமிதம்

    எப்படிப் பார்த்தாலும் இயான் மோர்கனை விடவும் நல்ல கேப்டன், நல்ல பேட்ஸ்மென் தான் டேவிட் வார்னர். ஐபிஎல் தொடரில் ஏகப்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: