• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 Final-தோனி படைக்கு ‘ஷாக்’ கொடுக்கும் கொல்கத்தாவின் முடிவு

IPL 2021 Final-தோனி படைக்கு ‘ஷாக்’ கொடுக்கும் கொல்கத்தாவின் முடிவு

தோனிக்கு ஷாக் கொடுத்த கொல்கத்தாவின் முடிவு

தோனிக்கு ஷாக் கொடுத்த கொல்கத்தாவின் முடிவு

யுஏஇ சுற்றில் மிகப்பிரமாதமாக ஆடிய அணி என்றால் அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான், சிஎஸ்கே அணி பிளே ஆஃப் தகுதி பெற்றவுடன் 3 ஆட்டங்களில் ஹாட்ரிக் தோல்வி கண்டது, ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ் அன்று செய்த மிகப்பெரிய தவறினால் சிஎஸ்கே இன்று பைனலில் கொல்கத்தாவைச் சந்திக்கிறது.

  • Share this:
    கொல்கத்தா அணி இதுவரை அதிரடி ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரசல் சில போட்டிகளை ஆடாமலேயே வெங்கடேஷ் அய்யர், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணாவின் பேட்டிங்கினாலும் லாக்கி பெர்கூசன், ஷிவம் மாவியின் அதிவேக பவுலிங் மற்றும் என்ன வீசுகிறார்கள் என்று இன்று வரை புரியாத சுனில்நரைன், வருண் கார்த்திக் போன்றோரால் இறுதிக்கு முன்னேறியது.

    இரு அணிகளும் நாளை, வெள்ளிக்கிழமை 15ம் தேதி பைனலில் மோதுகின்றன, இந்தப் போட்டியில் சிஎஸ்கேவை மிரட்ட வருகிறார் ஆந்த்ரே ரசல் என்று சில தரப்புகள் கூறுகின்றனர். ஆனால் அவருக்கு கிரேட் 2 ஹாம்ஸ்ட்ரிங் காயம், எப்படி வருவார் என்று தெரியவில்லை ஆனால் இவரும் ஒருவேளை ‘வரவேண்டிய நேரத்தில் கரெட்க்டா வருவாரோ என்னவோ?’

    இந்நிலையில் கொல்கத்தா அணியின் மெண்ட்டார் மற்றும் ஆலோசகரான ஆஸ்திரேலியாவின் டேவிட் ஹஸ்ஸி, ஆந்த்ரே ரஸல் காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார் வெள்ளிக்கிழமை இறுதிப் போட்டியில் ஆடவிருக்கிறார் என்று தோனி படைக்குக் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

    “டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் முன்பாக ரஸல் பந்து வீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டார், அநேகமாக இறுதியில் நிச்சயம் லெவனில் இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்” என்று சிஎஸ்கே வயிற்றில் புளியைக் கரைத்தார் டேவிட் ஹஸ்சி.

    இயான் மோர்கன் படுதண்டமாக ஆடுவதினால் அவரையே தூக்கி எறிந்து விட்டு ரசலை அவர் இடத்துக்குக் கொண்டு வந்தால் அணி பிரமாதமாக இருக்கும் என்று ரசிகர்கள் பேசிவர ரஸல் அனேகமாக ஷிவம் மாவி இடத்துக்குத்தான் வருவார் என்று கூறலாம். அல்லது லாக்கி பெர்கூசனுக்குப் பதில் ரஸல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Also Read: IPL 2021 KKR vs DC: தினேஷ் கார்த்திக்கிற்கு வார்னிங் கொடுத்த ஐபிஎல்

    நேற்று திடீர் கொலாப்ஸ் ஆனது பற்றியெல்லாம் கவலையில்லை, எங்கள் பேட்டிங்கே தனி ரகம்தான், எனவே அணிக்கு முழு ஆதரவு உண்டு என்கிறார் டேவிட் ஹஸ்ஸி. பைனல் துபாயில் நடப்பதால் முழு நம்பிக்கையுடன் செல்கிறோம். பிரெண்டன் மெக்கல்லம் தன் ஆளுமையை, அதிரடி இயல்பை அணி மீது இறக்கியுள்ளார் அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்கிறார் டேவிட் ஹஸ்ஸி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: