• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL 2021 Final CSK vs KKR Dhoni| ஐபிஎல் கோப்பையை வெல்ல தகுதி உள்ள அணி கொல்கத்தா தான்: பெருந்தன்மையின் உச்சத்தில் தோனி

IPL 2021 Final CSK vs KKR Dhoni| ஐபிஎல் கோப்பையை வெல்ல தகுதி உள்ள அணி கொல்கத்தா தான்: பெருந்தன்மையின் உச்சத்தில் தோனி

4வது ஐபிஎல் கோப்பையுடன் சிஎஸ்கே

4வது ஐபிஎல் கோப்பையுடன் சிஎஸ்கே

ஐபிஎல் 2021 சாம்பியன்களாகி சிஎஸ்கே அணி 4வது முறையாகக் கோப்பையை வென்றது இதனால் ரோகித் சர்மாவுக்குப் பிறகு தல தோனி அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டனாகத் திகழ்கிறார்.

  • Share this:
    கொல்கத்தாவை நேற்று ஐபிஎல் இறுதிப்போட்டியில் 27 ரன்களில் வீழ்த்தி 4ம் முறையாக தல் தோனி தலைமையில் எல்லோவ் ஆர்மி அனைவரையும் விசில் போட வைத்துள்ளது. முதலில் பேட் செய்து 192 ரன்களை விளாசிய சிஎஸ்கே பிறகு கொல்கத்தா அணியை 91/0 என்ற நிலையிலிருந்து அபார பந்து வீச்சு மாற்றம் களவியூகம் என்று தோனி கேப்டன்சியில் பின்னி எடுக்க கொல்கத்தா 165 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் என்று மட்டுப்பட்டது. ஆனால் இந்தத் தொடரில் சற்றும் எதிர்பாரா விதமாக எழுச்சி பெற்றது கொல்கத்தா, இதற்காக தோனி முதலில் அந்த அணியை பாராட்டினார்.

    சிஎஸ்கே சாம்பியன்


    தோனி கூறும்போது, “சிஎஸ்கேவை பற்றி பேச ஆரம்பிக்கும் முன்பாக நான் கொல்கத்தாவைப் பற்றி பேச விரும்புகிறேன். மீண்டெழுவது கடினம், அதுவும் கொல்கத்தா அணி ஆடிய விதம் மீண்டெழுந்து இறுதி வரை வந்த விதம் எதைக்காட்டுகிறது எனில் ஐபிஎல் கோப்பையை வெல்ல ஏதாவது அணிக்கு தகுதி இருக்கிறது என்றால் அது கொல்கத்தா அணிக்குத்தான், இந்த அணிக்கே அதிக தகுதி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

    அந்த அணியின் பயிற்சியாளர்கள், உதவிப்பணியாளர்களுக்கே இந்த பெருமை போய் சேர வேண்டும், இடைவெளி அவர்களுக்கு நிச்சயம் உதவியுள்ளது. சிஎஸ்கேவைப் பொறுத்த வரையில் வீரர்களை மாற்ற வேண்டியிருந்தது. மேட்ச் வின்னர்கள் ஒவ்வொரு ஆட்டமும் வந்து கொண்டே இருந்தனர், நன்றாக ஆடினர். புள்ளி விவரங்களை பார்த்தால் நாங்கள்தான் சீராக இறுதிப் போட்டியில் தோற்கும் அணியாக இருந்திருக்கிறோம்.



    Also Read: IPL 2021 Final | தோனி தலைமையில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே - புகைப்படங்கள்

     

    Also Read:விசில் போடு! கொல்கத்தாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிஎஸ்கே

     

    நாக் அவுட்டில் பலமாக திரும்ப வேண்டும். உள்ளபடியே கூற வேண்டுமெனில் நாங்கள் அதிகம் விவாதிப்பதெல்லாம் இல்லை. எங்கள் பயிற்சி அமர்வுகள்தான் அணி கூட்டமாகும் தனியாக ஒன் டு ஒன் பேச்சுதான். எங்கள் பயிற்சி அமர்வுகள் பிரமாதமாக அமைந்தன, ரசிகர்களுக்கு நன்றி, தென் ஆப்பிரிக்காவில் ஆடினாலும் ரசிகர்கள் எங்களுக்குப் பக்கபலமாக இருக்கின்றனர். சென்னையில் ஆடுவது போலவே உணர்ந்தேன். ரசிகர்களுக்காக சென்னைக்கு திரும்ப விழைகிறோம்” என்றார் தோனி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: