• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs KKR | பவர் ப்ளேவில் தினேஷ் கார்த்திக் செய்த மிகப் பெரிய தவறு... சிஎஸ்கே-விடம் எடுபடாத கொல்கத்தா மந்திரம்

CSK vs KKR | பவர் ப்ளேவில் தினேஷ் கார்த்திக் செய்த மிகப் பெரிய தவறு... சிஎஸ்கே-விடம் எடுபடாத கொல்கத்தா மந்திரம்

KKR vs CSK

KKR vs CSK

IPL 2021 Final | கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியின் பவர் ப்ளேவில் சிஎஸ்கே விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்துள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் இறுதிப் போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியும் 2 முறை சாம்பியன் பட்டம் கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோகர்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    கொல்கத்தா அணிக்கு எதிராக பேட்டிங்கை தொடங்கிய சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ருதுராஜ் - டூபிளெசிஸ் கூட்டணி இறுதிப் போட்டியில் சிஎஸ்கே தூக்கி பிடித்து உள்ளது. ஒருவருக்கு ஒருவர் சளைத்து இல்லாதவர்கள் போல் விளையாடி பவர் ப்ளேவில் 50 ரன்களை குவித்தனர்.

    சென்னை பேட்டிங்கின் போது 3-வது ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை டூ பிளெசிஸ் எதிர்கொண்டார். ஷகிப் பந்தை எதிர் கொள்ள தடுமாறிய டூ பிளெசிஸ் கீரிஸை விட்டு வெளியே சென்றார். அந்த ஸ்டெம்பிங் வாய்ப்பை கீப்பர் தினேஷ் கார்த்திக் தவறவிட்டதால் ஒரு ரன் பைஸாக அமைந்தது. இதனால் டூ பிளெசிஸின் அருமையான விக்கெட்டை கொல்கத்தா தவறவிட்டது. இதற்கு தண்டனையாக அந்த ஓவரில் 13 ரன்களை சிஎஸ்கே கொடுத்தது.

    Also Read : இந்த அவமானம் எனக்கு தேவையா... ட்ரோல் செய்யப்படும் ரிஷப் பந்த்

    கொல்கத்தா பவர் ப்ளேவில் ஷகிப் அல் ஹசன், பெர்குசன், ஷிவம் மவி, வருண் சக்கரவர்த்தி என 4 பவுலர்களை பயன்படுத்தியது. அதாவது 2 சுழற்பந்து, 2 வேகப்பந்து என இரண்டையும் பயன்படுத்தியது. ஆனால் எதுவே சிஎஸ்கேவிடம் பலிக்கவில்லை. சிஎஸ்கு பவர் ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடி வருகிறது.

    பவர் ப்ளேவில் சிஎஸ்கே விக்கெட்டை எடுக்க முடியாமல் கொல்கத்தா அணியின் நட்சத்திர பவுலர்கள் திணறி வருகின்றனர். இதனால் கொல்கத்தாவிற்கு சிஎஸ்கே இமலாய இலக்கை நிர்ணயக்க வாய்ப்புள்ளது. கொல்கத்தா அணியை பொறுத்த 160 ரன்களுக்கு மேல் இருந்தாலே அதனை சேஷ் செய்வது அவர்களுக்கு சிம்ம சொப்பணமாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: