• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • CSK vs KKR | தெறிக்கவிட்ட டூ பிளெசிஸ்... கொல்கத்தா வெற்றி பெற இமாலய இலக்கு நிர்ணயத்த சிஎஸ்கே

CSK vs KKR | தெறிக்கவிட்ட டூ பிளெசிஸ்... கொல்கத்தா வெற்றி பெற இமாலய இலக்கு நிர்ணயத்த சிஎஸ்கே

CSK vs KKR

CSK vs KKR

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டூ பிளெசிஸின் அதிரடியான ஆட்டத்தால் சிஎஸ்கே 192 ரன்கள் குவித்துள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் இறுதிப் போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியும் 2 முறை சாம்பியன் பட்டம் கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோகர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் - டூ பிளெசிஸ் கூட்டணி இந்த முறையும் சிஎஸ்கேவிற்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். பவர் ப்ளேவில் இந்த ஜோடி விக்கெட்டை பறிகொடுக்காமல் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.

    கொல்கத்தா பவர் ப்ளேவில் ஷகிப் அல் ஹசன், பெர்குசன், ஷிவம் மவி, வருண் சக்கரவர்த்தி என 4 பவுலர்களை பயன்படுத்தியது. அதாவது 2 சுழற்பந்து, 2 வேகப்பந்து என இரண்டையும் பயன்படுத்தியது. ஆனால் எதுமே சிஎஸ்கேவிடம் பலிக்கவில்லை. சிஎஸ்கே பவர் ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்தது. சிஎஸ்கே 61 ரன்களை எடுத்திருந்த போது தனது முதல் விக்கெட்டை இழந்தது.

    ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுனில் நரைன் பந்துவீச்சில் அவுட்டானார். அடுத்து வந்த ராபின் உத்தப்பா 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டு 31 ரன்கள் விளாசிய நிலையில் சுனில் நரைன் பந்துவீச்சில் தேவையில்லாத ரிவர்ஸ்ஷிப் விளையாடி எல்பிடபுள்யு முறையில் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் டூ பிளெசிஸ் ஆரம்பம் முதலே அதிரடி காட்டி வந்தார். சிக்ஸர் விளாசி அரைசதம் கடந்த டு ப்ளெசிஸ் கொல்கத்தாவை கலங்கடித்தார்.

    நான்காவது வீரராக களமிறங்கிய மொயின் அலியும் தன் பங்கிற்கு அதிரடி காட்ட சிஎஸ்கே ரன்ரேட் கிடுகிடுவென உயர்ந்தது. இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் டூ பிளெசிஸ் 59 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அவுட்டானார். மொயின் அலி 37 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகமல் களத்தில் இருந்தார்.

    கொல்கத்தா 193 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற இமாலய இலக்குடன் விளையாடி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: